Skip to main content
Scripbox Logo

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை எப்போது வித்ட்ரா செய்யலாம்

ஒவ்வொரு முறையும் லாபம் அல்லது இழப்பைக் காணும்போது மானந்தளராம செயல்பட வேண்டும்.

“அடடே, எனது பணம் வெறும் மூன்று மாதங்களில் 20 சதவீதம் உயர்ந்துள்ளதே! ஒருவேளையாக, நான் இந்த ஆதாயங்களை பாதுகாத்து வைக்க வேண்டும். ”அல்லது,“ அடச்ச, ஒரு மாதத்திற்கு முன்பு முதலீடு செய்த எனது பணம் எதிர்மறையான வருவாயைக் காட்டுகிறதே! ” இந்தவிதமான எண்ணங்களைக் கடந்து ஒவ்வொரு முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.

பணம் வளர்ச்சி அல்லது இழப்பை சந்திக்கும்போது, முதலீட்டின் வளர்ச்சியைப் பாதுகாக்க (சாத்தியமான இழப்பிற்க்கு பயந்து) அல்லது முதலீடு செய்த பணத்தையாவது பாதுகாக்க (மேலும் வருகிற இழப்புகளுக்கு பயந்து) ஒரு உந்துதலை உணர்கிறோம். உங்க முதலீடுகள் ஆதாயம் அல்லது இழப்பை  காணும்போதெல்லாம் அதை நீங்க வித்ட்ரா செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதா? அவ்வாறான சமயங்களில் நீங்க யோசிக்காம உங்க மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை வித்ட்ரா செய்வது புத்திசாலித்தனம் கிடையாது. மேலும், உங்கள் பணம் மியூச்சுவல் ஃபண்ட் களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதால், வருமானத்திற்கான வாய்ப்புகள் சிறப்பாகதான் இருக்கும். ஆகவே  எப்போ நீங்க அதை வித்ட்ரா செய்ய வேண்டும் வேண்டும்?

அவசர கால செலவிற்க்கு

அவசர நிதியை கணிசமான தொகையை வைத்து ஒதுக்குவதன் மூலம் உங்க நீண்டகால மற்றும் குறுகிய கால முதலீடுகளை பாதிக்காமல் பாதுகாத்திட முடியும். உங்களிடம் அத்தகைய அவசர நிதி இல்லைன்னா, எதிர்பாராத ஒன்றிக்கு உண்மையில் பணம் தேவைப்பட்டால், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைத் அணுகலாம்.

திட்டமிட்ட செலவிற்க்கு

நீங்க விடுமுறைக்கு அல்ல கார் வாங்குவதற்கு என்று முதலீடு செய்தால், இலக்கை எட்டும்போது வேண்டிய பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

அவ்வாறான செலவுகளுக்கு கூட, முதலீடு செய்த தொகையை தேவைக்கு முன்பே வித்ட்ரா செய்வது புத்திசாலித்தனம் அல்ல. இன்றைய காலங்களில், முதலீட்டில இருந்து விலகுவதற்க்கும் மேலும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்க்கும் சில நாட்களே ஆகும். பணம் செலுத்தும் தேதி நெருங்கினால் மட்டுமே  அதை வித்ட்ரா செய்யது கொளுங்கள்.

நீண்ட கால இலக்குகளை நெருங்குதல்

15 ஆண்டுகளாக உங்கள் குழந்தையின் கல்விக்காக நீங்க சேமித்து வருகிறீர்கள், அடுத்து ஐந்து வருடங்களில் அவர் கல்லூரிக்குச் செல்வார், எனவே உங்க பணத்தை நீண்ட காலத்தில் இருந்து (ஈக்விட்டி ஃபண்டுகள்) குறுகிய காலத்திற்கு (டெட் ஃபண்டுகள்) மாற்றுவது நல்லதாகும்  இதன்மூலம் உங்களின் வெல்த்ஐ மார்க்கெட்களின் ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாக்கலாம்.

நிலையான செயல்திறன்

குறுகிய காலத்தால் ஏற்ற இறக்கங்களினால் குறைவான செயல்திறன் ஏற்பட்டால், அப்போது பணத்தை வித்ட்ரா செய்வது என்பது புத்திசாலித்தனமாக இருக்காது.

இருப்பினும், நிதி இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படவில்லை என்றால், உங்க  பணத்தை வித்ட்ரா செய்து சிறந்த நிதியில் முதலீடு செய்வது நல்லது .

வரி கட்டுவதை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள்

எப்பொழுது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் வித்ட்ரா செய்கிறீர்களோ, அப்பொழுது நீங்க வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் நினைப்பதை விட ஆதாயம் குறைவாக இருக்கும்.

அவசரநிலைகளில் பணத்தை வித்ட்ரா செய்வதைத் தவிர, மூலதன ஆதாயங்களில் சுமைகள் மற்றும் வருமான வரியின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

Achieve all your financial goals with Scripbox. Start Now