Skip to main content
Scripbox Logo

உங்களுடைய கனவுகளை நனவாக்க உதவும் மூன்று நிதி இலக்குகள்

உங்களுடைய கனவுகளை நனவாக்க உதவும் மூன்று நிதி இலக்குகள் நீங்கள் நேரடியாக முதலீடு செய்து அதிக காலம் காத்திருக்காமல், அதற்கானப் பலன்களை பெற உதவும் மூன்று முக்கிய இலக்குகள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நம்மில் பலர் முதலீடுகள் ஏதும் செய்யாமல் இருப்போம், ஏனென்றால் நம் முதலீட்டிற்கான பலன் கிடைக்குமா, கிடைக்காதா என உறுதியாக அறியாமல் இருப்போம். நாம் முதன் முறையாக முதலீட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்குவதே, அதிக வரி கட்டுவதிலிருந்து சேமிக்க முற்படும்போதோ அல்லது யாராவது பங்கு இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தைப் ( ஈ.எல்.எஸ்.எஸ் - ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம்) பற்றி சொல்லும் போது தான்.

முதலீடு செய்வதில் உயிர்ப்போடு இருப்பதன் மூலம், நாம் உண்மையாக பணம் செலுத்த முடியும். பணத்தைப் பற்றி நிச்சயமற்ற சூழல் இருக்கும் போதோ அல்லது பணி நீக்க செய்திகளைக் கேட்கும் போது கற்பனை செய்து பாருங்கள். உங்கள் விடுமுறையைக் கழிக்க, உங்கள் சொந்த பணத்தைக் கொண்டு ஒரு அற்புதமான இடத்திற்குச் சுற்றுலா சென்று, திரும்பி வந்த பின் எந்தக் கடனும் செலுத்தத் தேவையில்லை என்றறியும் பொது உங்களுக்கு எப்படி இருக்கும்? நம்மிடையே மிகவும் நிலையானவர்களாக இருப்பதற்காக ஒரு வீட்டை சொந்தமாக்குவதை எதிர்நோக்கியிருப்பதன் பலன் என்ன?

நீங்கள் நேரடியாக முதலீடு செய்து அதிக காலம் காத்திருக்காமல், அதற்கானப் பலன்களை பெற உதவும் மூன்று முக்கிய இலக்குகள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. அவசர நிதிக்கு முதலீடு செய்யத் தொடங்குங்கள்

ஏன் செய்ய வேண்டும்: உங்களிடம் அவசர நிதி இருந்தால், நீங்கள் எந்தவொரு நிச்சயமற்றத் தன்மைக்கும் தயாராக இருப்பீர்கள். அது உடல் நலம், வேலை அல்லது குடும்பம் சார்ந்த விஷயமாக இருக்கலாம்; நீங்கள் எதிர்பாரா அந்த சூழ்நிலை உங்களை தூக்கி எறியாத வண்ணம் காத்துக்கொள்ள உதவும்.

அதனால் கிடைக்கும் நன்மை: உங்களுடைய நிதி பற்றாக்குறையை அவசர நிதியைக் கொண்டு நீங்கள் நம்பிக்கையோடும், எளிதாகவும் கையாள முடியும்.

இலக்கு தொகை: தற்போதைய உங்கள் சம்பளத்தில், பிடித்தம் போக உங்கள் கைக்கு வரும் தொகையை நான்கு மாதங்களுக்கு கணக்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் கைக்கு வரும் தொகை ரூ.60,000 ஆக இருந்தால், உங்கள் அவசர நிதி ரூ.2,40,000 ஆக இருக்க வேண்டும்.

இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்: இது நீங்கள் எவ்வளவு சேமித்து முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இரண்டு வருடத்திற்குள் இந்த சேமிப்பு இலக்கை அடைய முயலுங்கள். மேற்கண்ட எடுத்துக்காட்டின் படி செய்ய, நீங்கள் மாதத்திற்கு 10,000 ரூபாயை சேமித்து முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளில் 2,40,000 ரூபாய் என்ற இலட்சியத்தை அடையலாம்.

முதலீடு செய்வதற்கான சிறந்த இடம்: இதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக திரவ நிதி இருக்கும், ஏனெனில் இது சந்தை இயக்கங்கள் மற்றும் அபாயங்களால் பாதிக்கப் படாமல் இருப்பதோடு ஒப்பீட்டளவில் மிகவும் பாதுகாப்பான கடனில் முதலீடு செய்கிறது. இதைத் தவிர்த்து பார்த்தால் நீங்கள் நிலையான வைப்பு நிதியிலும் (எஃப்.டி) முதலீடு செய்யலாம்.

 “வெளிநாட்டு விடுமுறைக்கு நீங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக காத்திருப்பது சாத்தியமில்லை என்பதால், சுமார் மூன்று ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய திட்டமிடுவது நல்லது. இதற்கான சாத்தியக்கூறான வாய்ப்பாக நீங்கள் திரவ நிதிகளிலோ அல்லது குறுகிய கால கடன் நிதிகளிலோ முதலீடு செய்வது நன்று.”

2. விடுமுறைக்காக சேமிக்கத் தொடங்குங்கள்

ஏன்: விடுமுறையை கழிக்க உங்களுக்கு உண்மையில் ஒரு காரணம் தேவையா? ஓய்வெடுப்பது நல்லது தான்; குறிப்பாக உங்கள் வேலை அல்லது தொழிலின் ஆரம்பக் கட்டத்திலேயே நீங்கள் முழுமையாக உடல் மற்றும் மனச் சோர்வில்லாமல் இருக்க விரும்பினால்.

அதனால் கிடைக்கும் நன்மை: உங்களது சொந்த சேமிப்பைக் கொண்டே எந்தவித கடனில்லாமல் உங்களால் ஒரு வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்று வர முடியும்.

இலக்குத் தொகை: ஒரு 10 நாள் ஐரோப்பிய விடுமுறைக்கு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகும். அதனால் குறைந்தது மூன்று லட்ச ரூபாய் வரை சேமிக்க குறிக்கோள் வையுங்கள்.

இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்: குறியீட்டு நன்மை நீங்கள் ஆதாயங்களுக்கு செலுத்தும் வரியைக் குறைக்கக்கூடும் என்பதால், மூன்றாண்டு கால திட்டமிடல் இங்கே புத்திசாலித்தனமானதாக இருக்கும். அதற்காக நீங்கள் மாதம் ரூபாய் 10,000 வீதம் சேமித்து முதலீடு செய்து வந்தால், உங்களால் மூன்றாண்டுகளில் மூன்று லட்ச ரூபாய் என்ற இலக்கை எளிதாக அடைய முடியும். 

முதலீடு செய்வதற்கான சிறந்த இடம்: வெளிநாட்டு விடுமுறைக்கு நீங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக காத்திருப்பது சாத்தியமில்லை என்பதால், சுமார் மூன்று ஆண்டுகளில் இந்த இலக்கை அடைய திட்டமிடுவது நல்லது. இதற்கான சாத்தியக்கூறான வாய்ப்பாக நீங்கள் திரவ நிதிகளிலோ அல்லது குறுகிய கால கடன் நிதிகளிலோ முதலீடு செய்வது நன்று. 

3. வீடு வாங்குவதற்கான கட்டணத்தை சேமிக்கத் தொடங்குங்கள்

ஏன் செய்ய வேண்டும்: உங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் உங்களுக்காக ஒரு சொந்த வீடு வேண்டும் என்று விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் வீட்டுக் கடன் எடுத்தாலும், மொத்தக் கட்டணத்தில் 20 சதவீதத்தை நீங்கள் டவுன் பெமண்டாக செலுத்த வேண்டி வரும். அதனால் இதற்காக நீங்கள் எவ்வளவு தூரம் முன்கூட்டியே திட்டமிடுகிறீர்களோ அவ்வளவு தூரம் எளிதாக உங்களுக்கு இருக்கும்.

அதனால் கிடைக்கும் நன்மை: வீட்டுக் கட்டணத்தின் டவுன் பெமண்டிற்காக நீங்கள் தனியாக சேமிக்கும் போது அது உங்களது குழந்தையின் மேற்படிப்பு செலவிற்காக நீங்கள் வைத்திருக்கும் மற்ற சேமிப்புகளை பாதிக்காது. இதன் மூலம் நீங்கள் வீடு வாங்க முடிவு செய்யும் போது குறைந்த அளவு அழுத்தமே எதிர்கொள்ள நேரிடும்.

இலக்குத் தொகை: இதற்கு சற்றே கணிசமான பெரிய தொகை தேவைப்படும். பெங்களுருவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு குடியிருப்பை வாங்குவதற்கு ரூ.20 லட்சம் வரை தேவைப்படலாம். அதே போல் சிறிய நகரங்களில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான குடியிருப்பிற்கு ரூ. 6 லட்சம் வரை தேவைப்படும்.

இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்: இது மீண்டும் உங்களால் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதைப் பொறுத்தது. நீங்கள் வீடு வாங்குவதற்கு திட்டமிட்ட தேதியிலிருந்து குறைந்தது 6-7 ஆண்டுகளுக்கு முன்பே சேமிக்கத் தொடங்கவும். அப்போது தான் உங்களுடைய இலக்கிற்கான சிறந்த முதலீட்டை உங்களால் பயன்படுத்த முடியும்.

முதலீடு செய்வதற்கான சிறந்த இடம்: இதைத் திட்டமிட உங்களுக்கு ஐந்து வருடங்களுக்கும் குறைவான காலம் இருந்தால், நீங்கள் குறுகிய கால கடன் நிதி அல்லது திரவ நிதியைக் கருதலாம். உங்களிடம் 7 ஆண்டுகள் வரை இருந்தால், நீங்கள் பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது சிறந்தத் தேர்வாக இருக்கும். ஏனெனில் அதன் வருமானம் வருடத்திற்கு 12% வரை லாபத்தைத் தரக்கூடியது. இது பொதுவாக மற்ற முதலீட்டுத் தேர்வுகளை விடவும் அதிகமாக இருப்பதோடு, பண வீக்கத்தையும் வெல்ல உதவும்.

உங்களுடைய இலக்குகள் காத்திருக்கின்றன!! இன்றே தொடங்குங்கள்.

Our Most Popular Categories

Achieve all your financial goals with Scripbox. Start Now