Skip to main content
Scripbox Logo

பணச்சிக்கல்லருந்து விடுபட இந்த ஒன்பது நிலைகளை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

நம்மல்ல பெரும்பாலானோர் பைனான்சியல் சுதந்திரம் என்றால் வேலை தேவையில்லை என்று நினைக்கிறோம். ஒரு முழுமையான ஓய்வூதியம் பெற சில வருடங்களே இருக்கும்போது ஒன்பது முன்னேற்ற நிலைகளை வைத்து நீங்களே உங்கள அளவிட முடியும்.

நம்மல்ல பெரும்பாலானோர் பைனான்சியல் சுதந்திரம் என்றால் வேலை தேவையில்லை என்று நினைக்கிறோம். ஒரு முழுமையான ஓய்வூதியம் பெற சில வருடங்கள் தொலைவில் இருக்கும்போது ஒன்பது முன்னேற்ற நிலைகளை வைத்து நீங்களே உங்களை அளவிட முடியும். 

உங்களின் 20s மற்றும் 30s களில்

நிலை 1. உங்க சம்பளத்த எப்படி செலவிடனும்னு நீங்கதான் தீர்மானிக்கனும்.

சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு வேலை கிடைத்ததும்  இந்த  மாதிரி நடக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் க‌ல்விக் கடன் அல்லது குடும்பத்தினர் உங்கள் சம்பளத்திற்கு முன் உரிமை கோரலாம். ஆனா நீங்க அதையெல்லாம் விட்டுவிட்டு தேவைகளை விட அதிகமாக செலவுசெய்வீங்க.

நிலை 2. உங்களுக்கு பிடிக்காத வேலையை விட்டுவிட்டு, 3-4 மாதங்களில் புதுவேலை கிடைக்கும்வர முயற்சிக்கலாம்.

ஒரு வேலையை விட்டு வெளியேறும்போதுதான்,உங்க சேமிப்பு மதிப்பிற்க்குரியதை விட மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கும். ஆனா அதுக்காக நீங்க கஷ்டப்பட வேண்டியதில்ல. அதிக தேவை உள்ள  திறன்களை அடைவதற்கு நீங்க ஏற்கனவே முதலீடு செய்துள்ளதால் கவலை வேண்டாம்.

நிலை 3. உங்களை வலியுறுத்தாம  ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு நீங்க விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இது ‘என் விருப்பங்களை ஆராயுங்கள்’ பணம், நாம முன்பு பேசிய ‘விலகிச் செல்லுங்கள்’ பணம் அல்ல. அந்தந்த காலகட்டத்துல உங்களோட பைனான்ஸ் கடமைகளை புறக்கணிக்காம, மாற்று பாதையை ஆராய சிறிது நேரம் ஒதுக்குங்க. இப்போதுள்ள காலகட்டத்துல நீங்க சிக்கனமாக வாழப் போகிறீர்களா, அல்லது சம்பளம் வந்தபோதும் அதே வாழ்க்கை முறையைப் பராமரிக்கிறீர்களான்னு நீங்கதான் முடிவெடுக்கனும்.

நிலை 4. நீங்க ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் விடுப்பு எடுத்து உங்களுக்கு பிடிச்ச துறையில முதலீடு பண்ணுங்க.

எப்போது நீங்க உங்களோட பைனான்ஸ்க் கடமைகளை நிர்வகிக்க ஒரு நீண்ட கால அவகாசத்தை பெற்று ஒரு நாடோடியாகவோ, உங்களின் ஆர்வத்தைத் தொடரவோ அல்லது ஒரு தொடக்கத்தை உருவாக்கவோ போதுமான பணம் வேண்டும்

உங்களின் 40s மற்றும் 50s களில்

நிலை 5. கடன் இல்லாமல் இருப்பது

உங்களுடைய கடன்களை அடைப்பது என்பது ஒரு விடுதலையான உணர்வு -குறிப்பா சொல்லனும்னா நீங்க வசிக்கும் வீட்டிற்கு எதிரான கடன். பணப்புழக்கத்தை செய்றதத்தவிர, இது பைனான்சியல் நெருக்கடில இருந்து கிடைக்கிற சுதந்திரமாகும். கடன் இல்லாதவரா இருப்பதால், உங்க வருமானத்தில், உங்களைத்தவிர யாருக்கும், உரிமை இல்லை.

நிலை 6. ஒரு இலக்கு தேதியால், எப்போதும் உங்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான பாதை ஏற்படும்

தேதி என்பது சட்டம், மாநாடு அல்லது உங்கள் சொந்த ஆர்வத்தினால் வரையறுக்கப்படலாம். இலக்கானது விலகிய தேதிக்குப் பிறகு வருமான ஸ்ட்ரீம் இல்லாம உங்க வாழ்க்கை முறையை பராமரிக்க உங்களுக்கு தேவையான தொகையை தெரிந்து கொள்வதன் மூலமாக அதை தொடங்கலாம். பனச்செலவு உள்ள இந்த நிலையில், உங்களோட தற்போது உள்ள முதலீடுகள் மற்றும் உங்க முதலீட்டு வீதம் உங்கள் இலக்கு தேதிக்குள் உங்க தொகையை பெறமுடியும் என்பதை நீங்க அறிவீர்கள்.

நிலை 8. நீங்க வழக்கமா வாங்குற சம்பள வரவுகளை விட்டுவிடலாம் மேலும் உங்களிடம் உள்ள முதலீடுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உள்ள வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்ளும். நீங்க ஏற்கனவே இந்த நிலையில் இருக்கலாம், அது உங்களுக்கே தெரியாது.
நிலை 7. உங்கள் இலக்கு தேதியில் நீங்க வேலையை விட்டு வெளியேற தற்போது உள்ள முதலீடுகள் போதுமானவை.

நீங்க இனியும் சேமித்து முதலீடு செய்ய தேவையில்லை. நீங்க செய்ய வேண்டியது என்னவென்றால், உங்க வாழ்க்கை முறைக்கு வேண்டிய பணத்தை செலுத்த போதுமான அளவு சம்பாதிக்க வேண்டும். இது குறைந்த ஊதியம் பெறும் வேலையிலிருந்து மாறவும், நிகழ்ச்சிகளிலிருந்து மாறவும், வேலையை சமநிலையில் மேம்படுத்தவும் உங்களை அனுமதிக்கிறது.

இது பெரும்பாலும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும், உண்மையில், அவர்கள் ஏற்கனவே இதைச் செய்ய சிறந்தவர்களே.

நிலை 8. நீங்க இன்று உங்களது வேலைய விட்டு வெளியேறலாம்

நீங்க வழக்கமா வாங்குற சம்பள வரவுகளை விட்டுவிடலாம் மேலும் உங்களிடம் உள்ள முதலீடுகள் உங்க வாழ்நாள் முழுவதும் உள்ள வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்ளும். நீங்க ஏற்கனவே இந்த நிலையில் இருக்கலாம், அது உங்களுக்கே தெரியாது.

நிலை 9. உங்க வாழ்க்கையை வாழ தேவையான பணத்த விட அதிக பணம் இப்பொழுது உங்களிடம் உள்ளது

உங்கள் வேலையை விட்டு நீங்க வெளியேறலாம் மற்றும் உங்க முதலீடுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் வாழ்க்கை முறையை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், உங்களின் பிடித்தமான வேலையில் நிதியளிக்க முடியும் - பயணம், தொண்டு வேலை, அல்லது ஒரு பரம்பரையை உருவாக்குதல் ஆகும்.

இந்த பயணத்தில் நீங்க எங்கிருக்கிறீர்கள் என்று சிறிது நேரம் சிந்தியுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்க ஒரு நிலையை அடையும்போது, உங்களது சாதனையை கொண்டாடுங்கள், அடுத்த நிலைக்கான திட்டத்தை அமையுங்கள்.

Our Most Popular Categories

Achieve all your financial goals with Scripbox. Start Now