ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கு இருந்த 4 குறிப்பிட்ட பழக்கங்கள் எனக்கு financial independence அடைவதற்கு எப்படி உதவியது என்பதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு நான் எங்கள் தொழில்நுட்பக் குழுவிடம் வெல்த் க்ரிஏசன் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். எப்படியிருந்தாலும் மக்களின் பணத்தை வளர்க்கும் வணிகத்தில் நாம் இருக்கும் பொது எங்க சொந்த ஊழியர்களுக்கு ஏன் உதவக்கூடாது?

நான் பேசிய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் வயது இருதுகளில் இருக்கும். பேசும் போது நான் உணர்ந்தது என்னவென்றால், இருபதுகளில் இருக்கும் மக்களிடம், முதலீடு செய்ய அதிக அளவு பணம் இல்லை. உண்மையில், அவர்களுக்கு சேமிப்பு என்பதே ஒரு சவால்.

இது என் சொந்த ஆரம்ப நாட்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. பல Scripbox குழு உறுப்பினர்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார்கள்:

“நீங்க இருபதுகளில் பைனான்சியல் இண்டிபெண்டென்ஸ் அடைவதற்கு என்ன செய்தீர்கள்?”

ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கு இருந்த 4 குறிப்பிட்ட பழக்கங்கள் எனக்கு financial independence அடைவதற்கு எப்படி உதவியது என்பதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பழக்கம் # 1: நான் என் வரவு செலவை திட்டமிட்டேன்.

எனக்கு நண்பர்களிடமிருந்தோ அல்லது கிரெடிட் கார்டிலிருந்து வாங்கும் கடனினால் ஏற்படும் குற்ற உணர்வு பிடிக்காது. நான் ஒரு சாதாரண சாலரியில் வாழ்க்கையைத் தொடங்கியபோது, ஓய்வு மற்றும் வேடிக்கை உட்பட பெரும்பாலான செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தேன். செலவினங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன், ஆனால் நீங்கள் அதை திட்டமிட்டால், திட்டமிட்டு செய்தால் குறைந்தபட்சம் குற்ற உணர்ச்சியை அனுபவிப்பீர்கள்.

பழக்கம் # 2: என்னிடம் பைனான்சியல் காப்பு இருந்தது.

என் வரவுசெலவுத்திட்டத்தின் பகுதியாக, ஒரு இடைநிலையை ஏற்படுத்திக் கொண்டேன். இந்தப் பழக்கத்தினால் பின்னர் வாழ்க்கையில் முதலீடு எதுவும் இல்லாமல் இருக்கக்கூடாது என்று உறுதி செய்து கொண்டேன். என் நண்பர்களும் உறவினர்களும் இந்த இடைநிலை பழக்கத்தை பற்றி நகைச்சுவையாக பேசிக்கொண்டார்கள்.

எனக்கு இடைநிலை என்றால் செலவு மற்றும் சேமிப்பை தவிர்த்து மிஞ்சும் கூடுதலான பணம். நான் இந்த பாதுகாப்பு வளையத்தை எப்பவும் மீறியதில்லை. சேமிப்பை பற்றி நான் கவலைப் பட்டதினால் விலையுயர்ந்த பொருட்களை வாங்க முடிந்தது.

பழக்கம் # 3: தாமதமாக முதலீடு செய்யத் தொடங்கி இருந்தாலும் என் செலவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று நான் உறுதி செய்து கொண்டேன்.

நான் கணிசமான முதலீடு இருபது வயசுக்கு பின்னர் செய்யத் தொடங்கினேன். முதல் இரண்டு பழக்கவழக்கங்களின் அடிப்படையாக சேமிப்பு மற்றும் முதலீடு மற்றொரு செலவு என்று ஏற்றுக் கொண்டேன். அதுவும் அவசியம். சேமிப்பு என்பது “செலவுக்கு பின் மிஞ்சும் பணம்” இல்லை.

வாடகை மற்றும் பெட்ரோலுக்கு பணம் செலவானது, ஆனாலும் சேமித்தேன் . “இந்த மாசம் வேண்டிய அளவுக்கு சேமிப்பு இல்லையே” என்று எதுவும் இல்லை. வாடகை எவ்வளவு முக்கியமோ சேமிப்பும் அவ்வளவு முக்கியம்.

பழக்கம் # 4:என் திறமைகளின் அடிப்படையில், என் சாலரி அதிகரிக்கும்படி செய்தேன்.

வெறும் சேமிப்பு உங்களைப் பணக்காரனாக உதவாது. நீங்கள் முதலீடு செய்ய வேண்டும், செய்து கொண்டே இருக்க வேண்டும். உங்களிடம் முதலீடு செய்ய பணம் இல்லை என்றால் அதிக முதலீடு செய்யக்கூடாது.

எனக்கும் தெரியும் அதிக பணம் சம்பாதிக்க எளிதான வழி சாலரியை அதிகரிப்பது. ஒவ்வொரு வருஷமும் ஒரே திறமைக்கு யாரும் அதிக பணம் கொடுக்க மாட்டார்கள். நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். என் திறமைகளை மேம்படுத்திக் கொண்டேன். நான் வேலைக்கு போய்க் கொண்டே எம்பிஏ முடித்தேன். என் முதலாளிகள் அளித்த ஒவ்வொரு பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.

நான் தொடர்ந்து முன்னேற முயற்சி செய்தேன், நல்ல வாய்ப்புகளும் கிடைத்தது. நான் ஒன்றும் செய்யாமல் இருந்தாலும் என் சாலரி வேகமாக வளர்ந்தது.