
நாட்டில் வீட்டுக் குடியிருப்பின் விலை கடந்த பத்தாண்டுகளில் மும்மடங்கு அதிகரித்திருக்கின்றன.
தேசிய வீட்டு வசதி வாரியத்தின், என்ஹெச்பி(NHB) ரெசிடெக்ஸ் தரவு படி அகில இந்திய அளவில் கடந்த மார்ச் 2009-இல் இருந்து டிசம்பர் 2018 வரை, ஆண்டுதோறும் இது 13.8% வரை அதிகரித்து, நுகர்வோர் பண வீக்கத்தை பரந்த அளவில் வீழ்த்தியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மும்பை (15.7%), டெல்லி (15.9%) மற்றும் கொல்கத்தா (15.3%) ஆகிய நகரங்களின் வீட்டுக் குடியிருப்பின் விலை அதிகபட்சமாகவும், அதைத் தொடர்ந்து பெங்களூரு (10.0%) மற்றும் சென்னை (10.6%) ஆகிய நகரங்களிலும் விலை உயர்ந்திருக்கின்றன.
இதுவே ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு ஒரு வலுவான காரணியாக உருவெடுக்கிறதா?
வருமானம்:
புதிதாக சொத்துக்களில் முதலீடு செய்யத் தொடங்குபவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ரியல் எஸ்டேட்டிற்குப் பதில் ஈக்விட்டியில் முதலீடு செய்ததன் மூலம், நிகர லாபத்தில் 60 புள்ளிகள் அளவு சிறிய வித்தியாசம் இருந்தாலும், அவர்களால் அதன் வருவாயை சிறப்பாக நிர்வகிக்க முடிந்தது. அப்போது சென்செக்ஸ் மூலம் அளவிடப்பட்ட அந்த பங்குகளின் செயல்திறன் 14.4% அளவிற்கு அதிகரித்திருந்தது.
இருப்பினும் நீங்கள் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், அதன் செயல்திறன் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். 20 ஈக்விட்டி ஃபண்டுகள் ( பியூர் மிட் கேப், ஸ்மால் மிட் கேப் மற்றும் துறை சார்ந்த நிதிகளைத் தவிர்த்து) சராசரியாக ஆண்டுக்கு 18.3% வருவாயைக் கொடுத்தன... எஸ்பிஐ ப்ளூ சிப் (17.6%), ஹெச்டிஎப்சி டாப் 100 (18.3%) மற்றும் ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃப்ரண்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட்கள் (18.5%) போன்றவை பிரபலமான ஈக்விட்டி ஃபண்ட்களாக 2009 அல்லது அதற்கு முந்தையக் காலகட்டத்தில் இருந்தன. அவை அதன் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிறைவான வருமானத்தைக் கொடுத்தது. ரியல் எஸ்டேட் பாராட்டப்படும் துறையானாலும் ஈக்விட்டி ஃபண்ட்கள் சிறந்த லாபத்தைக் கொடுக்ககூடியது. மேற்கொண்டு சொன்னால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஈக்விட்டி ஃபண்ட்கள் 12% வரை லாபத்தைத் தரக் கூடியவை.
வசதி:
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கணிசமான ஆவணங்களையும், நிலையான மேற்பார்வையையும் உள்ளடக்கியது. அதை கைவசப் படுத்த நேரம் எடுப்பதோடு, முத்திரைத் தாள் மற்றும் பதிவு பரிவர்த்தனைக்கும் தனியே செலவு வைக்கக் கூடியது.
“ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கணிசமான ஆவணங்களையும், நிலையான மேற்பார்வையையும் உள்ளடக்கியது. அதை கைவசப் படுத்த நேரம் எடுப்பதோடு, முத்திரைத் தாள் மற்றும் பதிவு பரிவர்த்தனைக்கும் தனியே செலவு வைக்கக் கூடியது.”
அது போக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து சொத்தை வாங்கியப் பிறகு, கழிவு நீர் குழாய்களைப் பதிப்பது, கட்டிடத்திற்குப் பெயிண்ட் அடிப்பது அல்லது பழுது பார்ப்பது போன்ற செலவுகளையும் கையாண்டு கண்காணிக்க வேண்டியுள்ளது.
இதற்கு மாறாக, மியூச்சுவல் ஃபண்டை ஒப்பிட்டுப் பார்த்தல், அதில் முதலீடு செய்வது மிகவும் இலகுவான காரியமாகும். எந்தவொரு பரிவர்த்தனை செலவும் இல்லாமல் வெறும் ஒரு கிளிக் மூலம் நீங்கள் நிதியை வாங்கவோ, விற்கவோ செய்யலாம். மேலும் சொத்துக்களைப் போல் அல்லாமல் ஒரு நிதியிலிருந்து மற்றொரு நிதிக்கு எந்தவித சிரமமின்றி மிகவும் எளிதாக மாறலாம்.
நீர்மை நிறை - லிக்விடிட்டி
ஒரு அவசரத் தேவைக்காக போட்ட முதலீட்டைத் திரும்ப எடுப்பது தான் லிக்விடிட்டி; அதாவது நீர்மை நிறை ஆகும். உங்கள் நிதியை விற்றால், அதன் முதலீட்டு வருமானம் சில நாட்களிலே உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் அதன் விலை நிர்ணயம் தெளிவில்லாமல்