நியதி இன்டர்நெட்டில் லாகின் செய்து தன் நாளை துவங்குகிறாள்.  “சேல் மூன்று நாட்கள் மட்டுமே” என்கிற விற்பனை ஸ்கிரீன் மேல் காண்கிறாள். நேரத்திற்குட்பட்ட ஃபிளாஷ் விற்பனை சலுகையை பார்த்து வெறித்தனமா கார்டில்  சாமான்களை சேர்க்க தொடங்குகிறாள். 

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பார்சல் வந்ததும், அது ஒன்பதாவது ஜோடி டிசைனர் பூட்ஸ் என்பதை உணர்ந்தாள்.  

கட்டாய செலவினங்களில் ஈடுபடும் பலரில் ஒருவர் நியதி. இப்படிபட்டவங்க பெரும்பாலும் தனக்கு தேவையில்லாத சாமான்களை வாங்குறாங்க. இதனால தன் செலவினங்கள் மேலே அவர்களுக்கு கட்டுப்பாடு இருப்பதில்லை.

இருந்தாலும் நிதிகளை ஒழுங்கா நிர்வகிக்க மற்றும் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்த நிறைய வழிகள் இருக்கு.

1. பிரச்சினை பகுதிகளை அடையாளம் காணவும்

கட்டாய செலவு செய்பவர்களுக்கு பட்ஜெட் என்றால் என்ன என்று தெரியாது. அப்படிப்பட்டவர்கள் தவறும் முதல் படி இங்கே.

50-20-30 விதியைப் பயன்படுத்துவது பட்ஜெட்டைத் தொடங்க எளிதான வழிகளில் ஒன்றாகும். உங்க வருமானத்தில 50% தினசரி செலவுகள் மற்றும் வாடகை, உணவு மற்றும் மளிகைப் பொருட்கள், பில்கள் மற்றும் பிற அத்தியாவசியங்களுக்காக (வீட்டுத் தேவைகள்) இருக்க வேண்டும். சேமிப்பு மற்றும் முதலீடுக்காக நிதி இலக்குகளை நோக்கி மற்றொரு 20%. உங்க வருமானத்தில 30% பொழுதுபோக்கு மற்றும் பயணம் (விருப்பங்களை) போன்ற நெகிழ்வான செலவினங்களுக்காக.

குறிப்பாக கட்டாய செலவினங்கள் வீட்டு செலவை குறிவைத்து பைனான்ஸை மீண்டும் வடிவமைக்க வேண்டும். 

உணவு, திரைப்படங்கள், ஓய்வு பயணம் மற்றும் பலவற்றிற்கான செலவினங்களை குறைப்பதன் மூலம் தொடங்கவும். 

2. காத்திருப்பு காலம்

நீங்க அனாவசியமான கொள்முதல் செய்யும் போதெல்லாம் காத்திருப்பு காலத்தை கொடுங்க. பர்னிச்சர் ஷோரூம் அல்லது மாலில் கவர்ச்சிகரமான ஃபர்னிச்சர் ஏதாவது பார்த்தால் அதை குறிச்சி வைச்சுக்கோங்க, ஏதாவது சுவாரஸ்யமான கேட்ஜெட் ஆன்லைன்ல பார்த்தா விஷ்லிஸ்ட்ல போட்டு வைக்கவும்.

உங்களுக்கு உண்மையிலேயே தேவையா என்று பரிசீலிக்க ஒரு நாளுக்குப் பிறகு மீண்டும் பார்வையிடவும். இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் மற்றும் கடந்த கால அனுபவங்கள் உங்களுக்கு அந்தப் பொருள் உண்மையில் தேவையா என்பதை பற்றி ஒரு குறிப்பைத் தருகிறது. 24 மணி நேரம் குறைவாக இருந்தால் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு காத்திருங்கள் நல்ல விஷயத்துக்கு எப்பவும் காத்திருப்பது நல்லது.

3. பட்டியல் தயார் செய்து கொண்டு ஷாப்பிங் செய்யுங்கள் 

பெரும்பாலும் மக்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு டூத் பேஸ்ட் மற்றும் மளிகை சாமான்களை வாங்குவதோடு, கம், சாக்லேட்டுகள் மற்றும் தேவையற்ற பொருட்களுடன் ஷாப்பிங் கார்டை நிரப்பி விடுவார்கள். இந்த மாதிரி தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த ஒரு ஷாப்பிங் லிஸ்ட்டை முன்பே தயாரிக்கவும். மால்களில் ஷாப்பிங் செய்வதை தவிர்க்கவும் ஆன்லைன் ஷாப்பிங் உங்களுக்கு பிடித்தமானதாக இருந்தால் ஆஃபர் மற்றும் ப்ரோமோஷனல் ஈமெயில்களை அன்சப்ஸ்க்ராஈப் செஞ்சுடுங்க.

நீங்க அனாவசியமான கொள்முதல் செய்யும் போதெல்லாம் காத்திருப்பு காலத்தை கொடுங்க. பர்னிச்சர் ஷோரூம் அல்லது மாலில் கவர்ச்சிகரமான ஃபர்னிச்சர் ஏதாவது பார்த்தால் அதை குறிச்சி வைச்சுக்கோங்க, ஏதாவது சுவாரஸ்யமான கேட்ஜெட் ஆன்லைன்ல பார்த்தா விஷ்லிஸ்ட்ல போட்டு வைக்கவும்.

4. முதலீடுகளை ஆட்டோமேட் செய்யுங்க 

உங்க நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய உங்க முதலீடுகளை ஆட்டோமேட் செய்ய வேண்டும். உங்க வருமானத்தில் குறைந்தபட்சம் 20% நீண்ட கால அல்லது குறுகிய கால நிதி இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கில் முதலீடு செய்யப்பட வேண்டும். உங்க சம்பளத்தைப் பெறும் நேரத்திலிருந்து ஓரிரு நாட்களில் கழிக்கப்படும் SIP ஐத் தொடங்குங்க. அந்த வகையில் ஓய்வூதிய நிதி அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற பைனான்சியல் இலக்குகளை நீங்க கவனித்துக் கொள்ளலாம். 

சுருக்கமா சொல்லனும்னா, கட்டாய செலவு செய்பவர்கள் தங்கள் பைனான்ஸ்களை ஒழுங்குபடுத்தலாம் மற்றும் எதிர்காலத்திற்காக இப்படி சேமிக்க முடியும்: ஒரு எளிய பட்ஜெட் முறை மூலம் சிக்கல்களை அடையாளம் கண்டறிவது, செலவு வரம்புகளை நிர்ணயம் செய்வது,  முன்பே ஒரு ஷாப்பிங் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் அனாவசியமான செலவுகளை கட்டுப்படுத்துவது.

மேலும், முதலீடுகளை ஆட்டோமேட் செய்வதிவனால், அவர்களின் நிதி இலக்குகள் சமரசம் செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்வார்கள்.