Skip to main content
Scripbox Logo

உங்கள் முதலீடுகளைத் திரும்ப எடுக்க நினைக்கிறீர்களா? மீண்டும் யோசியுங்கள்.

நீங்கள் இப்போது முதலீட்டை நிறுத்திவிட்டு பின்னர் விலைக்கு காத்திருக்க வேண்டுமா? உங்களால் முடியும், ஆனால் அதன் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்றத் தன்மைகளை சரியாக சொல்வதற்கு உங்களுக்கு ஒரு படிகப் பந்து தேவைப்படும்.

உங்களுக்குத் தெரியுமா, 11 ஆண்டுகளுக்கு முன்னர் 2008 ஆம் ஆண்டில், உள்நாட்டு பங்குச் சந்தைகளைத் திருத்தத் தொடங்கிய போது, முக்கிய குறியீடுகள் அவற்றின் மதிப்பில் 50% -க்கும்  அதிகமானதை இழக்கும் வரை அவை நிறுத்தவில்லை; அதுவும் வெறும் 8 மாதங்களில்..?

ஜனவரி 2008-ல் நிஃப்டி 50 இன்டெக்ஸ் அதன் உச்சநிலையிலிருந்து 59% சரிந்து பின்னர் மார்ச் 2009-ல் சரி செய்தது. அதே நேரத்தில் நிஃப்டி 100-ம், நிஃப்டி 500-ம் தனியே 61% மற்றும் 64% வரை சரிந்தது.

இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்ப்போம். 2008 ஆம் ஆண்டின் உச்சநிலையுடன் ஒப்பிடும்போது சுமார் 11,250 நிஃப்டியில் நாம் 80% அதிகமாகவும், 2009 இல் காணப்பட்டதைவிட கிட்டத்தட்ட 3.5 மடங்கு அதிகமாகவும் இருக்கிறோம்.

இப்போது நீங்கள் முதலீட்டை நிறுத்தி விட்டு காத்திருக்க வேண்டுமா? உங்களால் முடியும், ஆனால் அதன் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்றத் தன்மைகளை சரியாக சொல்வதற்கு உங்களுக்கு ஒரு படிகப் பந்து தேவைப்படும். அத்தகைய சூப்பர் சக்தி இல்லாத பட்சத்தில், பொது அறிவோடு செயல்படுவதே சிறந்த வழியாகும். சந்தையில் பங்குகள் கீழிறங்கும் நேரம் சிலவற்றில் முதலீடு செய்வீர்கள் என்ற அறிவைக் கொண்டு தொடர்ந்து வழக்கமான முதலீடுகளைச் செய்யவும். 

“சந்தை அதிகமாக நகரும் போது மட்டும் நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் இலாபங்கள் குறைவாகவே இருக்கும். சந்தை சரிவில் இருக்கும் போது நீங்கள் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் சராசரி கொள்முதல் விலை குறைவாக இருக்கும். எனவே நீங்கள் முதலீட்டைத் திரும்ப எடுக்கும் போது சிறந்த இலாபத்தைக் காணலாம்.”

நிச்சயமாக இருங்கள்

பரஸ்பர நிதிகள் வழங்கும் முறையான முதலீட்டுத் திட்டங்களின் (SIP) உண்மையான நன்மை, சந்தை வீழ்ச்சியடையும் போதும் தொடர்ந்து முதலீடு செய்வதாகும். அதனால் உங்கள் எஸ்ஐபி-யை நிறுத்துவது அல்லது இடையிலேயே நிறுத்துவது வேண்டாம். குறைந்த விலையில் அதிகமாக வாங்கும் போது, சுழற்சி மாறும்போது நீங்கள் அதிக லாபம் பெறுவீர்கள்.

சந்தை அதிகமாக நகரும் போது மட்டும் நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் இலாபங்கள் குறைவாகவே இருக்கும். சந்தை சரிவில் இருக்கும் போது நீங்கள் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் சராசரி கொள்முதல் விலை குறைவாக இருக்கும். எனவே நீங்கள் முதலீட்டைத் திரும்ப எடுக்கும் போது சிறந்த இலாபத்தைக் காணலாம். 

இது எவ்வாறு செயல்படுகிறது என்று இங்கே பாப்போம்:

உங்களுடைய 1000 ரூபாய் எஸ்ஐபி ஒரு ஈக்விட்டி ஃபண்டில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். கடந்த மாதம் திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) அல்லது திட்டத்தின் விலை 20 ரூபாயாக இருந்தால் உங்களுடைய எஸ்ஐபி-க்கு 50 யூனிட்கள் கிடைத்திருக்கும். இந்த மாதம் திருத்தத்திற்குப் பிறகு, என்ஏவி 10% குறைந்து 18 ரூபாய் ஆகிவிட்டது என்று வைத்துக் கொண்டால், உங்களுடைய 1000 ரூபாய் எஸ்ஐபி-க்கு 55 யூனிட்கள் (ரவுண்டட் ஆப்) கிடைக்கும். இதனால் உங்கள் முதலீட்டைத் தொடர்வதற்குப் பதிலாக நீங்கள் 10% வீழ்ச்சியைக் கண்டு பயந்து உடனே இதுவரை நீங்கள் செய்த முதலீட்டை எடுத்து விடுவீர்கள்.

அதனால் உங்கள் என்ஏவி, நீங்கள் வாங்க விரும்பும் விலைக்கு வரும் வரை காத்திருந்து பின்னர் விற்கவும். நீங்கள் விரைவில் விற்றால் உங்களுக்கான ஊதியம் எப்படி இருக்கும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சூழ்நிலைகளையும் (1,2) கவனமாக கருத்தில் கொள்ளவும்.


மறந்துவிடாதீர்கள்!!

பங்குகளில் முதலீடு செய்வது என்பது ஒரு நீண்ட கால அர்ப்பணிப்பாகும். ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட உங்களுடைய இலக்குகளை மட்டும் பங்கு முதலீடுகளுடன் இணைத்திடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த காலகட்டத்தில், சந்தை சரிவில் இருந்தாலும் உங்கள் முதலீடுகளை நிறுத்தாமல் தொடர்வதோடு, உங்களுடைய வழக்கமான முதலீடுகளையும் குறைந்த விலையிலுள்ள பங்குகளை வாங்கவதற்கு பயன்படுத்த வேண்டும்.

உங்களுடைய நிதி குறிக்கோளிற்கு ஒன்று அல்லது இரண்டு வருடம் இருக்கும் போது மட்டுமே, நீங்கள் உங்கள் நிதியை ஈக்விட்டியிலிருந்து வேறு நிலையான வருமானம் போன்ற நிலையான வருவாய் விருப்பத்திற்கு மாற்றுவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் தான் நீங்கள் பங்குகளை விற்க வேண்டுமே தவிர சந்தையில் வரும் மாற்றங்களின் போது அல்ல.

நீங்கள் எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் போது, தரம் முக்கியமானதாகும். ஏனெனில் ஒரு பங்கு நல்ல வருவாயைத் தரும் போன்ற அனைத்து ஊகங்களும் தரமான நிதியை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே உள்ளன. அதை செய்வதில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லாத பட்சத்தில், நல்ல அனுபவமும், தகுதியும் பெற்ற ஆலோசகரின் உதவியைப் பெறுங்கள்.
Achieve all your financial goals with Scripbox. Start Now