உங்களில் சிலர் இக்கேள்வியை கேட்டிருக்கிறார்கள், பலரும் யோசித்திருக்கிறார்கள்.

மாத வருமானத்தில 5% அல்லது 50% எது “போதுமானது” என்று நீங்க எப்படி தெரிஞ்சிக்கிறீங்கள்?

நீங்கள் 30 களின் ஆரம்பத்தில இருக்கும்போது, பின்வருகிற காட்சிகள் பொதுவாக உங்க வாழ்க்கைக்கு பொருத்தமாகும்:

#1. நீங்கள் மிகவும் இளமையாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டீர்கள், தனிநபர்களாக இல்லாமல் குழுவாக உங்க கனவுகளை ஆராயத் தொடங்குகிறீர்கள். ஏற்கனவே குழந்தைகள் பெற்றிருக்கலாம் அல்லது குழந்தை பெற திட்டமிடலாம்.

#2. நீங்க ஒரு குடும்பத்தை அமைத்தவுடன், உங்க செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன, பொதுவாக அதுல ஒரு பகுதியை பெரிய வீட்டுக்கு குடியேறுவதன் மூலமாக அதனோடு தொடர்புடைய செலவுகளுக்கு நாம செலவழிக்கிறோம்.

#3. இப்போ நீங்க நீண்ட காலத்தை பற்றி தீவிரமா சிந்திக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.

#4. உங்க வேலைய நீங்க இழப்பது, குறிப்பா நீங்க முதன்மையா சம்பாதிப்பவரா இருந்தா கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்க வருமானத்தை பொறுத்து செலவுகள் அதில் பெரும்பகுதி அல்லது ஒரு சிறிய பகுதியை எடுத்துக்கொள்ளும். உங்க வீட்டுக் கடனை நீங்க வாங்கி இருக்கக் கூடிய நேரமும் இதுதான். இந்த நிலைமையில் சேமிப்பு உங்களுக்கு விருப்பமில்லை, ஒரு அவசியமாகும்.

முன்னுரிமை வரிசையில், நீங்க சேமிக்க வேண்டிய பட்டியல்கள்:

#1. 6 மாத செலவுகள் (உங்களின் கடன் EMI கள் உட்பட) –

வேலை இழப்பு அல்லது வருமான இழப்பு உங்க வாழ்க்கையின் இந்த கட்டத்தில் கையாளுவதற்க்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால நீங்க இதை முதலில் சேமிக்க வேண்டும். கடன் நிதிகள் அல்லது RD க்கள் இந்த நோக்கத்திற்க்கு ஏற்றவையாக இருக்கும்.

உங்களுக்கு இன்னும் எவ்வளவு கால அவகாசம் இருக்கிறது?

வெறும் 2 வருடங்களுக்கும் குறைவாக.

அப்படி என்றால் இன்னும் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

குறைந்தபட்சம் மாத செலவுல 1/4th ஆகும். அப்படின்னா உங்க மாத செலவு ரூ. 20,000 என்றால், ரூ.5,000 வரை சேமிச்சிக்கலாம்.

#2. குழந்தைங்களின் கல்வி –

உங்க குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் திருமணத்திற்க்காக சேமித்து வைப்பது மனதில் இருக்கும் மற்றொரு விஷயம். உங்க சேமிப்பில் இருந்து ஒரு பகுதியை அவங்களுக்காக ஒதுக்குவது மிக நல்லது.

உங்களுக்கு இன்னும் எவ்வளவு கால அவகாசம் இருக்கிறது?

பொதுவாக 15-20 வருடங்கள்.

அப்படி என்றால் இன்னும் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

நீங்க விரைவாக ஓய்வு பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் உங்க சம்பளத்தில் இருந்து குறைந்தது 10% சேமிக்க வேண்டும். எனவே எப்படி சேமிப்பது என்பதை பற்றி அறிய,இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை படிங்கள்.

# 3. ஓய்வு –

உங்களுக்கு வேலை வேண்டாம் என்று சொல்லும் காலம் ஒன்று வரும். எனவே அதற்காக ஏற்கனவே சேமிக்க ஆரம்பிக்கவில்லை என்றால், இப்போது சேமிக்கத் தொடங்குங்கள். இதுவே ஒரு பெரிய குறிக்கோளாகும், அதை அடைய உங்களுக்கு நேரம் தேவைப்படும், அதனால் இப்போதே தொடங்குவது மிக முக்கியமானது, இதன் மூலமாக நீங்க குறந்தபட்சம் 60 வயதில் ஓய்வு பெற விரும்பலாம். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இந்த இலக்கிற்கு ஏற்றவையாகும்.

உங்களுக்கு இன்னும் எவ்வளவு கால அவகாசம் இருக்கிறது?

15-25 வருடங்கள், ஆனால் போதுமான தொகையை அடைவதற்கு நீங்க இப்போதே தொடங்க வேண்டும்.

அப்படி என்றால் இன்னும் எவ்வளவு சேமிக்க வேண்டும்?

நீங்கள் விரைவாக ஓய்வு பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளத்தில் இருந்து குறைந்தது 10% சேமிக்க வேண்டும். 

நீங்க உங்க 30s களின் ஆரம்பத்தில், உங்களுக்கான வேலையை செய்வதற்க்கும் குறிப்பிடத்தக்க வாழ்க்கையை உருவாக்குவதற்கும் உங்களுக்கு போதுமான நேரம் இருக்கிறது. நீங்க அதை உங்களுக்கு சாதகமாக செயல்படுத்த வேண்டும்.