Skip to main content
Scripbox Logo

எனக்கு வயசு 25, இது என் முதல் வேலை. என் ஃபைனான்ஸை எப்படி திட்டமிட வேண்டும்?

இளம் வயதில் பைனான்ஸை பற்றி நினைப்பது மற்றும் திட்டமிடுவது மிகப்பெரிய விஷயம்.

இளம் வயதில் பைனான்ஸை பற்றி நினைப்பது மற்றும் திட்டமிடுவது மிகப்பெரிய விஷயம். வாழ்த்துக்கள், பயணத்திற்கு வருக. உங்கள் வயதில் கீழ்கண்ட எளிமையான கொள்கைகளை பின்பற்றினால் உங்க முதலீடு பயணம் வசதியாக இருக்கும்.

1. வரி விலக்கு பெற்ற சம்பளத்தில் 30% சேமிக்கத் தொடங்கவும்

இது ஆரம்ப காலமாக இருந்தாலும், இருந்தாலும் ஆரம்ப காலத்தில நீங்க உருவாக்கிய பழக்க வழக்கங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும். உங்கள் வரம்புக்குள் வாழ கற்றுக்கொள்ளுங்கள். வரி விலக்கு பெற்ற சாலரியில் 30% சேமிக்கவும். உங்கள் வேலை வாழ்க்கையில முதல் மூன்று வருஷங்கள் இதை செய்தால் பழகிப் போகும்.

2. செலவுகள் மற்றும் சாலரிக்கு தனித்தனியான அக்கவுண்ட்கள்

உங்கள் செலவு (மற்றும் சாலரி அக்கவுண்ட்கள்) மற்றும் உங்கள் முதலீட்டு அக்கவுண்டை தனித் தனியாக வைத்துக் கொள்ளவும். சாலரி வந்தவுடன் உங்கள் முதலீடு அக்கவுன்டில் 30% சேமித்து வைத்து விடுங்கள். இதை முறைப்படி செய்தால் நீங்கள் இருந்ததை வைத்துக் கொண்டு வாழ கற்றுக்கொள்வீர்கள். விலையுயர்ந்த உணவகங்களை தவிர்க்க வேண்டி வரும் இல்லை உங்களுக்கு வேண்டிய சாமான்களை தள்ளுபடி விற்பனையில் வாங்க வேண்டி வரும் ஆனால் இப்படிப்பட்ட பழக்கங்கள் உங்களை நல்ல நிலைமையில வைக்கும். இன்று பணக்காரர்களாக இருக்கும் நிறைய பேர், முதல் காராக பயன்படுத்திய காரை உபயோகித்துள்ளார்.அஜிம் பிரேம்ஜி பணக்காரரான பிறகு தன் பணியாளர்களில் ஒருவரிடம் இருந்து ஒரு பயன்படுத்திய காரை வாங்கியிருக்கிறார்.

3. எங்கே முதலீடு செய்ய


  • உங்கள் அவசர தேவைகளுக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைத்திருங்கள். இளம்வயதில் இது உங்க 3-6 மாதங்களின் செலவு பணமாக இருக்கலாம். இதை ஒரு லிக்விட் ஃபண்டில் ஒதுக்கி வைக்கலாம் (ஃபிக்ஸட் டெபாசிட் இல்லை).
  • மீதமுள்ள பணம் ஏகுய்ட்டி ம்யூச்சுவல் ஃபண்டில் போடலாம்.
  • உங்கள் வரி சேமிப்பு தேவைகளை அளவிட்டு ELSS (ஏகுய்ட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம்) ல் முதலீடு செய்யுங்கள்.
  • உங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் அதே நேரத்தில் நீண்ட கால சேமிப்பு ஆகும்.
  • லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கு முன் உங்கள் செலவுகளை (வீட்டுக் கடன், குழந்தைகள் கல்வி போன்றவை) கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.

4.கிரெடிட் கார்ட் மற்றும் கடன்களைத் தவிர்க்கவும்.

  • வீட்டுக்காக அல்லது படிப்புக்காக கடன் வாங்குவதில் தப்பில்லை. இதைத் தவிர வேறு எல்லா விதமான கடன்களை தவிர்க்கவும்.
  • இவ்வளவு எலக்ட்ரானிக் பேமென்ட் அமைப்புகள் இருக்கும்போது கிரெடிட் கார்டு அவசியம் இல்லை ஆனால் பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு பில்களை சரியான நேரத்துல செலுத்துங்கள்.


5. சரியான நேரத்தில் சில முக்கியமான விஷயங்களை நினை வில் வைத்துக் கொள்ளுங்கள்.

கீழ்க்கண்ட அட்டவணையில், உங்கள் பணத்தை வெவ்வேறு வழிமுறைகளில் முதலீடு செய்து இருமடங்காக எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் அது பணவீக்கத்தை எப்படி தவிர்க்கும் என்பதை காணுங்கள். நீண்ட கால முதலீடுகள் ஆபத்து நிலைகளை குறைக்கின்றன.

முதலீட்டின் அற்புதமான உலகத்திற்கு வரவேற்கிறோம். பைனான்சியல் ஃபிரீடம் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்காமலிருக்கலாம் ஆனால் அது உங்க வாழ்க்கையில் பல விருப்பங்களை கொடுக்கிறது.

Achieve all your financial goals with Scripbox. Start Now