
அடுத்த சில ஆண்டுகளில் உங்களால ஒரு லட்சம் சேமிக்க முடிந்தால், வாழ்த்துக்கள்!
நீங்க சேமிப்பில நல்லவராக இருக்கலாம் ஆனால் அந்த பணத்தை RDயில் போடுவதா அல்லது பேங்க் அக்கவுண்டில் அப்படியே வைப்பதா என்று யோசிக்கிறீர்களா? அந்த பணத்தை அப்படியே விட்டு விடுவதா அல்லது ஏதாவது செய்ய வேண்டுமா?
உங்கள் லட்சத்தை பற்றி முடிவு எடுப்பதற்கு முன் இந்த மூன்று முக்கியமான கேள்விகளை நீங்களே கேட்டுக்கோங்க.
# 1. வருமானம் இல்லாத சில மாதங்களுக்கு உங்களைத் தக்கவைக்க போதுமான பணம் இருக்குதா?
இல்லைன்னா பணத்தை அப்படியே RD யில அல்லது சேவிங்க்ஸ் பேங்க் அக்கௌன்ட்ல போடுங்க அல்லது FD அல்லது டெட் ஃபண்ட்ல போடுங்க இந்த பணத்தை சிக்கலான சமயத்தில உபயோகிக்கலாம்.
உங்களிடம் ஏற்கனவே அவசர நிதி இருந்தால், மீண்டும் வாழ்த்துக்கள் நீங்க உங்க நண்பர்களை விட சிறப்பாக இருக்கிறீங்க. இப்போ நீங்க அடுத்த கேள்விக்கு போகலாம்.
# 2. வரும் 1-5 ஆண்டுகளில பெரிய செலவுக்கான திட்டங்கள் ஏதாவது இருக்கா? அதுக்காக ஏதாவது சேமிப்பு செஞ்சு இருக்கீங்களா?
உங்களிடம் அவசர நிதி இருந்தும் வெளிநாட்டு விடுமுறை, ஏதாவது பெரிய பொருள் போன்றவைகளுக்காக, திட்டமிடவில்லை என்றால் இந்த பணத்தை உபயோகிக்கலாம். இந்த பணத்தை டெட் ஃபண்டில் வைத்திருந்தால் நிலையாக வளர்ந்து கொண்டே இருக்கும் மேலும் கூடுதல் பணம் கிடைக்கும் அதைத்தவிர செலவு வரும்போது இதை உபயோகிக்கலாம்.
பெரிய கொள்முதல்களுக்காக உங்களிடம் அவசர நிதி இருக்குன்னா எங்க வணக்கம்! நீங்க உங்க நண்பர்களை மிஞ்சி விட்டீர்கள். இப்போ நீங்க மூன்றாவது கேள்விக்கு செல்லலாம்.
# 3. உங்க எதிர்காலத்துக்காக சேமிப்பு இருக்கா? நீண்டகால இலக்குகளுக்காக நீங்க சேமிக்கிறீர்களா?
இப்போதிலிருந்து 20-30 ஆண்டுகள் அப்புறம் என்ன நடக்கும் என்பது கணிப்பது மற்றும் சேமிப்பது மிகவும் கஷ்டம். இருந்தாலும், உங்க அவசர மற்றும் குறுகிய கால தேவைகள் ஏற்கனவே நிறைவேறி இருந்தா, உங்க கூடுதலான ஒரு லட்சம் ரூபாயை நீண்ட காலத்த்துகு வைப்பது சிறந்த யோசனை.
இதற்காக, அந்த ஒரு லட்சத்தை ஒரு நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வளர விடுங்க. நீங்க ஓய்வுபெறும் நேரத்தில், ஒரு லட்சம் மிகப் பெரிய தொகையாக மாறும்.
அவசர நிதியை நீங்க கவனித்துக்கொண்டிருந்தா, அடுத்த ஐந்து ஆண்டுகளில வரவிருக்கும் செலவுகள் மற்றும் ஓய்வூதியத்திற்காக சேமித்தல் மற்றும் முதலீடு செய்தா, நீங்க சரியான பாதையில செல்கிறீர்கள்.
உங்க கைல இருக்கிற லட்ச ரூபாயை என்ன செய்வது? சரி, நீங்க விரும்பியதைச் செய்யுங்க, அப்படி செய்ய உரிமை உங்களுக்கு இருக்கு.