உங்கள்ள நிறைய பேரு நெட் ஃப்ளிக்ஸ்ல மார்க்கோஸ் நிகழ்ச்சியின் பெரிய ரசிகர்களாக இருக்கலாம். குறிப்பா முதல் ரெண்டு எபிசோடுகள். பப்லோ எஸ்கோபார் நல்லவர் இல்ல. நம்மில் பலபேர் அவன் வாழ்க்கை முறையைப் பாத்து பொறாமை பட்டாலும் அவர் பணம் சம்பாதித்த விதம் ரொம்ப மோசமானது. ஒரு தனிப்பட்ட ரேஸ் ட்ராக் அல்ல விருப்பமான இடங்கள்ல பார்ட்டி செய்வது யாருக்கு தான் பிடிக்காது? பணம் ரொம்ப கவர்ச்சியான ஒரு பொருள்.உங்க சம்பளத்தை அதிகமாக்கி உங்களுக்காக சம்பாதித்துக் கொடுக்கும் சொத்துக்களில் முதலீடு செய்வது அல்ல நீண்ட காலத்துக்கு சம்பளத்தில அதிகமா சேமிப்பு செய்யறது- இது ரெண்டும் உங்கள விரைவில பணக்காரன் ஆகும். 
விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் டான்கள் சொல்வது போல் சிறந்த வருமானம் உங்க வருமானத்தைத் தக்கவைக்க முடியாத வாழ்க்கை முறையிலிருந்து உங்கள பாதுகாக்க முடியாது. உங்க நண்பர்களை விட அதிகமா, அளவுக்கு மீறிய வாழ்க்கை வாழ்ந்தா ஒரு போதும் அது ஒரு மகத்தான வாழ்க்கை இல்லை. நீங்க செய்ற வெல்த் கிரியேஷன் முறை தவறு, உங்க வருமானத்த மீறிய வாழ்க்கை வாழரிங்க என்பதைக் காட்டும் நான்கு அறிகுறிகள் இதோ.  
1. உங்க மாத வருமானத்தில குறைந்தபட்சம் 50% உங்க கையில திடீர் செலவுக்காக இல்லாத போது.
உங்க வருமானம் ரொம்ப அதிகமாக இருந்தாலும் நீங்க சம்பளத்த நம்பி வாழறீங்கன்னா, அது ஒரு ஆபத்தின் அறிகுறி. இத சரிபார்க்க ஒரே வழி உங்க கிரெடிட் கார்டு உபயோகிக்காமல் அல்லது கடன் வாங்காம உங்க மாத வருமானத்தில 50% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள செலவுகளை சமாளிப்பது.
ஆனா இதுக்கு விதிவிலக்குகள் இருக்கின்றன நிச்சயமா பெரிய நகரங்களில் அதிக வருமானம் உள்ளவங்க கூட உயர்ந்த வாடகை மற்றும் பயண செலவுகளுக்காக தம் மாத வருமானத்தை சார்ந்து இருப்பாங்க.
2. உடல்நலம் இல்லாமல் வேறு காரணங்களுக்காக உங்க பணப்புழக்கம் மாதம் தோறும் குறைந்து போகும் போது அல்லது ஒரு வருஷத்துல மூன்று மாதங்களுக்கு மேலான செலவுகளுக்கு உங்ககிட்ட சேமிப்பு இல்லை எனும்போது
ஒவ்வொரு மாசமும் உங்க செலவுகளுக்கு பிறகு மிஞ்சியிருக்கும் பணம் குறைந்துகொண்டே போகிறது என்றால், இது சேமிப்பை விட செலவு அதிகம் என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
உங்க வருமானத்தில் 20% ஒவ்வொரு மாசமும் சேமிக்க முடியவில்லை, மற்றும் 3 மாசத்துக்கு மேல அப்படியே இருந்தால் உங்க செலவுகளை ஒரு முறை சரிபார்க்க வேண்டிய நேரம் என்று அர்த்தம். இது வாழ்க்கை முறையில் சமரசம் செய்வது பற்றி அல்ல, நாம இங்கே பேசுவது உங்க பைனான்சியல் பாதுகாப்பை பற்றி.
அதிகரிக்கும் கிரெடிட் கார்டு பில்லுகள் உங்க வருமானம் போதுமானது இல்லை என்பதற்கான அறிகுறிகள். இதனால் மேலும் மேலும் கிரெடிட் கார்டை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
3. உங்க கிரெடிட் கார்டு பில்லுகள் பல மாதங்களுக்கு தொடர்ந்து அதிகமாக இருந்தா 
அதிகரிக்கும் கிரெடிட் கார்டு பில்லுகள் உங்க வருமானம் போதுமானது இல்லை என்பதற்கான அறிகுறிகள். இதனால் மேலும் மேலும் கிரெடிட் கார்டை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். நீங்க எல்லா செலவுகளுக்கும்f கிரெடிட் கார்டை பயன்படுத்தி பில்லை ஒவ்வொரு மாதமும் தவறாமல் கட்டிக் கொண்டு இருக்கலாம் அப்படியானால் இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை, ஆனா செலவுகள் அதிகமாகும் போது அப்படிப்பட்ட பெரிய பில்கள் வந்தால், உங்க செலவுகளை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று அர்த்தம்.
4. உங்க கடன்கள்  உங்க சம்பளத்தில் 50% விட அதிகமாக இருந்தா (ஈஎம் ஐ)
உங்க ஈஎம்ஐ பணம் உங்க சம்பளத்தில் 50% விட அதிகமா இருந்தா நீங்க பாதுகாப்பாக இல்லை. இந்தக் கடன் நீங்க உங்க வீட்டுக்காக கட்டுறீங்க,  ஆனால் உங்களுக்கு ஒரு அவசர நிதி இல்லைன்னா அது ஒரு பெரிய பிரச்சனையாகும். நிலைமை எதுவானாலும் அவசர நிதியை தொடாதீங்க.
முதல் படியாய் இந்த அறிகுறிகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தா உங்க வாழ்க்கை தரத்தை சமநிலை ஆக்கி வீழ்ச்சியை தவிர்க்கலாம்.