Skip to main content
Scripbox Logo

முறையான முதலீட்டுத் திட்டத்தில் (எஸ்ஐபி) செய்யக்கூடிய 5 பிழைகள் பெரும் வருவாயை இழக்கச் செய்யலாம்

சில முதலீட்டாளர்கள் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், முறையான முதலீட்டுத் திட்டத்தின் பலன்களை பெற முடியாமல் போகிறார்கள்.

சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான சிறந்த வழி முறையான முதலீட்டுத் திட்டங்கள் ஆகும். அது தானாகவே பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும் போது அதிகப் பங்குகளையும், ஏற்றத்தில் இருக்கும் போது குறைந்த பங்குகளையும் வாங்க உங்களை அனுமதிக்கிறது.  மேலும் தொடர்ச்சியான முதலீடுகள் செய்வதன் மூலம், சந்தையின் சரியான நேரத்தை கணிக்கும் தலைவலியிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

இருப்பினும் சில முதலீட்டாளர்கள் தங்களின் தவறான நடவடிக்கைகள் மூலம், முறையான முதலீட்டுத் திட்டத்தின் நன்மைகளை பெற முடியாமல் போகிறார்கள்.

1. கஞ்சத்தனமாக இருப்பது

பத்தாண்டு காலத்திற்கு மேலாக, சிறந்த லார்ஜ் கேப் மற்றும் மிட்-கேப் ஈக்விட்டி நிதிகள் வருடாந்திர வருமானமாக முறையே 12% மற்றும் 16% லாபத்தைத் தந்துள்ளன. மேற்கொண்டு செல்லும் போது, குறைந்த பண வீக்க சூழலின் பின்னணியில் முதலீட்டாளர்கள் தங்கள் வருவாய் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.

மேலும் ஒருவர் போதுமான அளவு முதலீடு செய்துள்ளாரா என்பதே மிகப் பெரும் கேள்வியாக இருக்கின்றது. முறையான முதலீட்டுத் திட்டத்தின் முழுமையான தகவல்களை அறியாமல் குறைந்த அளவு விவரங்களை வைத்துக் கொண்டு முதலீடு செய்து அது உங்களுடைய நிதி இலக்குகளையும் அடைய உதவாவிட்டால், பின் அந்தத் திட்டத்தில் முதலீடு செய்து எந்த பயனுமில்லை.

எனவே உங்கள் கணக்குகளை நீங்களே பாருங்கள். உங்களுடைய நிதி இலக்கை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் - ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான முதலீட்டை அடைய பின்னோக்கி வேலை செய்யுங்கள். நீண்ட கால முதலீட்டின் போது ஈக்விட்டிகள் ஆண்டிற்கு 11 சதவிகிதலிருந்து 12 சதவிகிததிற்கு இடையில் வருவாயை ஈட்டலாம்.

2. சந்தை நேரம் 

பங்குச் சந்தை சரிசெய்யத் தொடங்கும் போது, ​​முதலீட்டாளர்கள் பெரும்பாலும் தங்கள் எஸ்ஐபிகளை தற்காலிகமாக நிறுத்துகிறார்கள். இது நல்ல யோசனை அல்ல. பங்குச் சந்தை சரி செய்யும் போது, முதலீடுகளை பாதியிலேயே நிறுத்தும் போது எதிரே குறைந்த விலையில் நிறைய பங்குகளை சொந்தமாக்கும் வாய்ப்பை நழுவ விடும் வாய்ப்புண்டு.

3. அனைத்தும் ஒன்றே

முதலீட்டாளர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, தங்களின் சேமிப்பு அனைத்தையும் ஒரே திட்டத்தில் முதலீடு செய்வது ஆகும். இது வசதியாகத் தோன்றினாலும், இதுவே அழிவுக்கு வழி வகுக்கும்.

ஒரு சமயம் எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (எஸ்ஐபி) இப்போது சரியாக வேலை செய்வதில்லை என்று என்னிடம் கூறினார். நான் அவரிடம் “ஏன்? என்று கேட்டதற்கு அவர் சொன்னார், நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிறந்த மதிப்பீட்டைக் கொண்ட ஒரு பங்கு நிதியில் முதலீடு செய்தேன். இப்போது பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஆனால் எனது போர்ட்ஃபோலியோவில் அத்தகைய பிரதிபலிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதனால் நான் எனது அனைத்து பங்குகளையும் மீட்டு வருகிறேன்”, என்றார்.

முறையான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வது எப்போதுமே பலனளிக்கும். இருப்பினும் இதை செயல் படுத்த, முதலீட்டாளர்கள் எப்போதுமே நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் நிதி வருவாயை பன்முகப்படுத்தியும், மதிப்பாய்வும் செய்ய வேண்டும்.

4. தவறான தேர்வுகள் 

முறையான முதலீட்டுத் திட்டத்தில் (எஸ்ஐபி) முதலீடு செய்யும் போது, ஒரு குறிப்பிட்ட தேதியில் உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாக டெபிட் செய்யும் வசதியை அவை அனுமதிக்கின்றன. அது ஒரு மாதத்தில் 1, 5, 10, 15, 20 அல்லது 28 போன்ற எந்தத் தேதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். பல முறை முதலீட்டாளர்கள் தோராயகமாக ஒரு தேதியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இதைச் சரியாக செய்வதென்றால் ஒருவர் தனது சம்பளத் தேதியிலிருந்து சில நாட்கள் கழித்து ஒரு தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பள நாள் 5-ஆம் தேதியாக இருந்தால், நீங்கள் 10-ஆம் தேதியைத் தேர்ந்தெடுப்பது நல்ல தேதியாக இருக்கும். அதை விடுத்து, மாத இறுதியில் ஏதாவதொரு தேதியைத் தேர்ந்தெடுக்கும் போது உங்கள் வங்கி கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் போகலாம். முறையான முதலீட்டுத் திட்டங்கள் உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து ஏற்படும் இடையூறுகளையும், கடினமாக உழைக்கும் கணக்காளர்களிடமிருந்து வரக்கூடிய எதிர்பாரா “தாமதங்களையும்” அனுமதிக்கவே செய்கின்றன.

5. அதிகப்படியான ஆசைகள் 

“இறுதியாக, சில முதலீட்டாளர்கள் அதிகமான முறையான முதலீட்டுத் திட்டத்திலோ அல்லது ஒரே திட்டத்தில் அதிகமான தொகையையோ முதலீடு செய்வார்கள். அப்போது அவர்கள் எதிர்பாரா வேலை இழப்பையோ அல்லது மருத்துவ செலவினங்களைப் பற்றியோ நினைப்பதில்லை. அப்படியான சூழ்நிலைகள் அவர்களை ஆபத்தான நிதி பற்றாக்குறையில் தள்ளக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுப்பது அவசர கால நிதி மட்டுமே; அதனால் எப்போதுமே எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதி செய்யுங்கள்.”

மொத்தத்தில், நீண்ட கால இலக்கின் மேலே ஒரு கண் வைத்து சேமிப்பதைப் போல முறையான முதலீட்டுத் திட்டங்களிலும் போதுமான அளவு முதலீடு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் முதலீடுகளை பன்முகத்தன்மையோடு வேறுபடுத்தி, சந்தையின் ஏற்ற, இறக்கங்களை உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இத்தகைய அறிவார்ந்த உத்திகள், உங்களை உங்கள் நிதி இலக்குகளை நெருங்கி அடைவதற்கு நிச்சயமாக தனது பங்கினைச் செய்யும்.

Achieve all your financial goals with Scripbox. Start Now