பெற்றோர்கள் இயல்பாகவே தங்களது குழந்தைகளை அணுக முயற்சிக்கிறார்கள். அவர்கள் குழந்தைகள் பிறந்த தருணத்திலிருந்து உதவி செய்ய விரைகிறார்கள். பிள்ளைகள் வளர்ந்தவுடன், சில பெற்றோர்கள் தங்களது பைனான்சஸ் கொடுத்து கையாள அனுமதிக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள். உயர் கல்வியைத் தவிர, அவர்களின் வீட்டுச் செலவுகளையும் பார்த்துக்கொள்கின்றனர். அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், வீட்டுக் கடன்கள், பேரக்குழந்தைகளின் கல்வி மற்றும் பலவித்ததில் பைனான்சியல் உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்களது ஆதரவை வாழ்நாள் முழுவதும் வழங்கலாம் அதே வேளையில், பைனான்சியல் உதவி செய்வதற்கு என்று ஓர் எல்லை இருக்கிறது, அது உங்களது ஓய்வூதிய இலக்குகளை பாதிக்கக்கூடும்.

எனவே ஓய்வு பெற்ற பெற்றோர்கள் பின்வருபவையைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்:

குழந்தைகளை ஆதரிக்க வேண்டிய நேரங்கள் வரும்போதெல்லாம், உங்க சொந்த பைனான்ஸ்களை கொடுத்து உதவாமல், எந்த அளவிற்கு தங்களால் ஆதரிக்க முடியும்? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், குறைந்தபட்சம், உங்க நீண்ட கால முதலீடுகளிலிருந்து பணத்தை இழக்க வேண்டாம்.

முதலில் உங்களது பாதுகாப்பு

உங்கள் பிள்ளைகளுக்கு உதவும் முன்பு, விமானத்தில் ஆக்ஸிஜன் முகமூடியைப் போடுவது போன்ற அறிவிப்புகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களாலே சுவாசிக்க இயலாவிட்டால், எவ்வாறு  மற்றவர்களுக்கு உதவி செய்ய நேரம் கிடைக்கும்.

உங்க பைனான்சின் பாதுகாப்புதான் முதலில் நினைவுக்கு வரவேண்டும்,அது சுயநல காரணங்களுக்காக இல்லை. உங்கள் ஓய்வூதியம் உங்களுக்கு போதுமானதாக இருந்தால், நீங்க குழந்தைகளை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

குழந்தைகளை ஆதரிக்க வேண்டிய நேரங்கள் வரும்போதெல்லாம், உங்க சொந்த பைனான்ஸ்களை கொடுத்து உதவாமல், எந்த அளவிற்கு தங்களால் ஆதரிக்க முடியும்? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், குறைந்தபட்சம், உங்க நீண்ட கால முதலீடுகளிலிருந்து பணத்தை இழக்க வேண்டாம்.

ஆரம்பகால பைனான்சியல் பாடங்கள்

முடிந்தவரை சீக்கிரமாக உங்க பிள்ளைகளுக்கு அவர்களின் வழிமுறைகளுக்கு ஏற்ப எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற பாடங்களைக் சொல்லிக்கொடுப்பது மிகவும் முக்கியம்.

அவர்கள் அதை கேட்காத பட்சத்தில், அவர்களுக்கு கூடுதளாக கொடுக்கின்ற செலவு பணத்தை தவிர்க்கவும். அவர்கள் சைக்கிள் வாங்க விரும்பினால் அல்லது கிரிக்கெட் சாதனங்கள் வாங்க விரும்பினால், அதை அவர்கள் ‘சம்பாத்தியத்தில’ வாங்க விடுங்கள். கல்லூரியில் இன்டர்ன்ஷிப் என்பது வாழ்க்கையில் அலுவலக கலாச்சாரத்தை அவர்களுக்கு காட்டுவதோடு மட்டுமல்லாமல் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது.

மேலும், பைனான்சியல் இன்டிபென்டென்ஸ் அடைய அவர்களுக்குச் சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி கற்பிக்கவேண்டும். இவை அனைத்தும் அவர்களது வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு துறைகளிலும் எவ்வாறு முன்னேற வேண்டும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு வழங்கும்.

எல்லைகளை அமைக்கவும்

உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களோடு உரையாடுங்கள். நல்லதோர் ஆலோசனை அல்லது உணர்ச்சி பூர்வமான ஆதரவை வழங்க எப்போதும் நீங்கள் தயாராக இருக்கும்போது, பைனான்சியல் ரீதியாக அவர்களுக்கு எந்த அளவில் உங்களால ஆதரவளிக்க முடியும் என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது. இவை அனைத்தையும் அவர்கள் முன்பே எடுத்துக்கூறுங்கள்.

கல்லூரியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் முன்பு  ஒருசில ஆரம்ப கையிருப்பு தேவைப்படலாம். இருந்தாலும், அது அவர்களின் ‘முதல் ஊதியத்துடன்’ இணைத்து காலக்கெடுவை அமைக்க வேண்டும்.

வீட்டுச் செலவுகளில் எவ்வாறு அவர்கள் பங்களிக்க வேண்டும் என்பதைப் புரியவையுங்கள் – அவை பயன்பாட்டு பில்கள், மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு அல்லது பயணம் போன்றவையாகும். அவர்களை தொடர்புகொண்டு உறுதியான எல்லைகளை உருவாக்குவதன் மூலமாக, அவர்களின் எதிர்பார்ப்பு நிலையை முன்பே அமைத்து, எதிர்காலத்தில் மோதலுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

கடன்களைத் தவிர்க்கவும

அவர்களின் கல்லூரிக்குத் தேவையான பைனான்சியல் ஏற்பாடுகளை நீங்களே செய்தாலும்கூட, அதன் பிறகு, உங்களின் பைனான்சியல் நிலையை சரிபார்க்க வேண்டும். முதுகலை கல்விக்கு நீங்கள் பைனான்சியல் உதவி செய்வது உங்க ஓய்வூதிய சேமிப்பை பாதிக்கும். இது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தாலும் கூட, அதை உங்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடி அதற்கு பதிலாக மாணவர் கடனை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது. அந்த மாணவக் கடன் உங்கள் பிள்ளைகளின் வருவாயிலிருந்து, 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

முடிவாக, எல்லாவற்றையும் சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். நிச்சயமாக, நீங்கள் அவசர காலங்களில் கண்டிப்பாக உதவ வேண்டும். இருப்பினும், உங்கள் பிள்ளைகளை ஆதரிக்கும்போது நீங்க அவர்களை பைனான்சியல் ரீதியாக நம்பி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்க. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்க குழந்தைகளுக்கு நீங்க கூறும் மிக முக்கியமான மரபு என்னவென்றால், ஃபினான்சியல் இன்டிபெண்டன்ட் ஆக இருக்க கற்றுக்கொள்வது.