பங்குகளில் முதலீடு என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஆபத்தை எதிர்கொள்வதைக் குறிக்கிறது. இதன் அர்த்தம் இந்த ஆபத்தில் வைக்க உங்களிடம் பணம் இருக்க வேண்டும். ஆனால் இது பணக்காரர்கள் மட்டுமே பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று அர்த்தப்படுகிறதா?

நீங்கள் சொத்து சேர்த்தப் பின்னரே பங்குகளில் முதலீட்டைத் தொடங்க முடியும் என்பது தவறானக் கருத்தாகும். மாறாக உங்கள் பங்கு முதலீடுகளை ஆரம்பக் கட்டத்தில் தொடங்குவதே உங்களுக்கு செல்வத்தை குவிக்க உதவும்.

பங்குகளுக்கு நேரம் தேவை

பங்குகளின் விலைகள் ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் என்பது உண்மை தான், குறிப்பாக நீங்கள் சில வாரங்கள் அல்லது சில மாதங்களில் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்தால், இது உங்களுக்குத் தெரிய வரும். ஈக்விட்டி பங்குகளின் சந்தை விலை பெரும்பாலும் குறுகிய கால உணர்வால் இயக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் 5-7 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும்போது, ​​அடிப்படை நிறுவனத்தின் வருவாயின் தரமே மிகவும் முக்கியமானது.

எனவே, மூத்த முதலீட்டாளர்கள் மற்றும் நிதி மேலாளர்கள் எப்போதும் நீண்ட கால முதலீடுகள் பற்றி பேசுவதை நாம் காண்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஈக்விட்டி முதலீட்டில் விலை ஏற்ற இறக்க ஆபத்துகள் (சந்தை இயக்கவியல் காரணமாக விலைவாசி உயர்வு அல்லது குறைந்து வருவதால் ஏற்படும் ஆபத்து) நீங்கள் நீண்ட காலமாக முதலீடு செய்யும் போது மென்மையாகிறது.

இது நீங்கள் பங்குகளில் முதலீடு செய்ய பயப்படத் தேவையில்லை என்பதையும் குறிக்கிறது. நீங்கள் எவ்வளவு தூரம் முன்கூட்டியே முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்களோ, அவ்வளவு அதிக காலம் நீங்கள் முதலீடு செய்ய வேண்டி வருவதனால், நீங்கள் எதிர்பார்க்கும் வருவாயை அடைய விடாமல் செய்யும் அபாயத்தைக் குறைக்கும். மேலும், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம், நீங்கள் ஒரு ஈக்விட்டி போர்ட்ஃபோலியோவில் ஒரு மாதத்திற்கு ரூ. 500 வரை முறையான முதலீட்டு திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம் அல்லது நீங்கள் மொத்த தொகையாக 5000 ரூபாய் முதலீடு செய்யலாம். தொகை சிறியதாக இருந்தாலும், அது நிதியில் விகிதாசாரமாக முதலீடு செய்யப்படும், இது நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் நன்மையை உங்களுக்குத் தரும்.

“பரஸ்பர நிதி மேலாளர்கள் பங்கு வர்த்தகத்தில் பல வருட அனுபவம் கொண்ட தகுதி வாய்ந்த வல்லுநர்கள். உங்கள் பணி நிதியின் கூறப்பட்ட அளவுகோலை விட அதிகமாக, தொடர்ந்து நீண்ட கால வருவாயை வழங்கக் கூடிய சரியான நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பதே ஆகும்.”

பங்குகளுக்குச் சரியானத் தேர்வு தேவை

நீங்கள் ஒரு தரமற்ற ஈக்விட்டி பங்குகளைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் நிறைய பணத்தை இழக்க நேரிடும். பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன்பு உங்களிடம் ஏற்கனவே ஏராளமான சேமிப்புகள் இருந்தால், இது பெரிய கவலையாகத் தெரியாது. இருப்பினும், முதலீட்டை  உங்களது மாதாந்திர சேமிப்பில் தொடங்கும் போது, உங்கள் பங்குகளின் தேர்வில் கவனக்குறைவாக இருக்க முடியாது. இது போன்ற சூழ்நிலைகளிலும் பரஸ்பர நிதி தவறானத் தேர்வினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க உதவும்.

பரஸ்பர நிதி மேலாளர்கள் பங்கு வர்த்தகத்தில் பல வருட அனுபவம் கொண்ட தகுதி வாய்ந்த வல்லுநர்கள். உங்கள் பணி நிதியின் கூறப்பட்ட அளவுகோலை விட அதிகமாக, தொடர்ந்து நீண்ட கால வருவாயை வழங்கக் கூடிய சரியான நிதி மேலாளரைத் தேர்ந்தெடுப்பதே ஆகும்.

ஒரு நிதியின் அளவுகோல் பொதுவாக ஒரு சந்தையின் குறியீடாகும், இது ஒரு பங்கு இலாகாவிலிருந்து வருவாயின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பை அமைக்கிறது. நல்ல தரமான செயல்திறன் உடைய பங்குகளைக் கண்டறிய ஏராளமான ஈக்விட்டி ஃபண்ட் மேலாளர்கள் மூலம் நீங்கள் வடிகட்ட முடியாவிட்டால், உங்களுக்கு உதவ ஒரு நிறுவப்பட்ட ஆலோசகரை நம்புங்கள். அந்த ஆலோசகர் நீண்ட கால முதலீட்டு திட்டத்திற்கான நடத்தையை உருவாக்க உங்களுக்கு உதவுவார்.

பரஸ்பர நிதிகள் மற்றும் ஆலோசகர்களின் உதவியுடன், அதிகம் சேர்த்து குவித்த சேமிப்புகள் இல்லாமல் இருந்தாலும் சிறிய தொகையுடன் கூட நல்ல தரமான பங்குகளில் முதலீட்டை நீங்கள் தொடங்கலாம். முன்கூட்டியே நீங்கள் தொடங்கி நீண்ட காலம் முதலீடு செய்தால் உங்கள் இலக்குகளை அடைய அதிக வாய்ப்புள்ளது.