Skip to main content
Scripbox Logo

நிதி இலக்குகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அவற்றை அடைய உங்களுக்கு உதவி புரியுமா?

காட்சிப்படுத்தும் நுட்பம் செயல்திறன் முன்னேறத்திற்கான ஒரு நுட்பமாகும். விளையாட்டு ஜாம்பவான்களான மைக்கேல் ஜோர்டான் மற்றும் டைகர் உட்ஸ் ஆகியோர் தங்கள் செயல்திறனை அதிகரிக்க காட்சிப்படுத்துதலைப் பயன்படுத்தினார்கள். இந்த நுட்பத்தை அனைத்து துறைகளிலும் பயன்படுத்தி நிதி இலக்குகளை அடையலாம்.

1980 களில் விளையாட்டு உளவியலாளர்கள் ரஷ்யாவில் ஒரு ஆய்வை நடத்தினர். அதில் அவர்கள் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

குழு I - 100% உடற்ப்பயிற்சி


குழு II - 75% உடற்ப்பயிற்சி மற்றும் 25% மன பயிற்சி


குழு III - 50% உடற்ப்பயிற்சி மற்றும் 50% மன பயிற்சி


குழு IV - 25% உடற்ப்பயிற்சி மற்றும் 75% மன பயிற்சி

விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனில் அதிக முன்னேற்றத்தைக் குழு IV கில் கண்டறிந்தனர், அதன் பின்பு குழு III, பிறகு II மற்றும் I. இந்த விளையாட்டு வீரர்கள் காட்சிப்படுத்தும் நுட்பங்களைப் பயன்படுத்தி மனரீதியாகப் பயிற்சிப் பெற்றுள்ளனர், இது உடற்ப்பயிற்சிக்கு எதிராக செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.

காட்சிப்படுத்தும் நுட்பம் செயல்திறன் முன்னேறத்திற்கான ஒரு நுட்பமாகும். விளையாட்டு ஜாம்பவான்களான மைக்கேல் ஜோர்டான் மற்றும் டைகர் உட்ஸ் ஆகியோர் தங்கள் செயல்திறனை அதிகரிக்க காட்சிப்படுத்துதலைப் பயன்படுத்தினார்கள். இந்த நுட்பத்தை அனைத்து துறைகளிலும் பயன்படுத்தி நிதி இலக்குகளை அடையலாம்.

காட்சிப்படுத்துதல் என்றால் என்ன?

உங்க இலக்கை அடைய தெளிவான கற்பனை செய்யும் ஓர் செயல்முறை. வேறுவிதமாக கூறவேண்டும் என்றால், உங்க வெற்றியை நீங்க முன்பே உருவாக்குகிறீர்கள். இது, நீங்க எவ்வாறு நினைக்கிறீர்கள் என்பதை பொறுத்து மாற்றங்களைத் ஏற்படுத்தும்.

நம்பிக்கையை உருவாக்குதல்

நிஜம் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட படத்தை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது மூளைக்கு கடினமான வேலையாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது எப்படியென்றால் ஒரு செயலை நீங்க காட்சிப்படுத்தும்போதும், மூளையின் அதே பகுதியில நிஜமா அந்த செயலை செய்த மாதிரி தூண்டி காட்டுகிறீர்கள்.

ஏற்கனவே நீங்க உங்க இலக்கை அடைந்துவிட்டாலும் கூட உங்க மூளையை அது ஏமாற்றிவிடும். உந்துதலையும் நம்பிக்கையையும் வைத்து நிஜத்தில் எதையாவது அடைவதற்கு தேவையானவற்றை உருவாக்கிக் கொடுக்கும் (அதாவது முன்பே நீங்க செய்ததைப் போலவே).

எப்படி காட்சிப்படுத்துவது?

இலக்கை எவ்வாறு அடைய வேண்டும் என்பதை பற்றிய பிரபலமான வழியொன்று உள்ளது, அது என்னவென்றால் விளைவுகளை முன்பே காண்பது ஆகும். உதாரணமாக, குழந்தையின் கல்விக்கு நிதியுதவி செய்வதும், மகள் தனது பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்ததைக் கொண்டாடுவதையும் கற்பனை செய்து பாருங்கள். இருப்பினும், காட்சிப்படுத்துதலை நீங்கள் ஓர் நிலையான படமாக பார்ப்பதை விட ஒரு திரைப்படமாக நினைத்துப் பாருங்கள்.

நிஜம் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட படத்தை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது மூளைக்கு கடினமான வேலையாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது எப்படியென்றால் ஒரு செயலை நீங்கள் காட்சிப்படுத்தும்போதும், மூளையின் அதே பகுதியை நீங்கள் நிஜசெயலைச் செய்வது போன்று தூண்டுகிறீர்கள் என்ற அடிப்படையான கருத்து ஒன்று உள்ளது.

உங்க நிதி இலக்கை சிறப்பாகச் செய்வதற்கு பின்வருபவை உதவி புரியும்.

நீங்க நிதானமாக இருக்கும்போது சரியான இடத்தையும் காலத்தையும் தேர்வு செய்ய வேண்டும். அதிகாலை இல்லையென்றால் தூங்குவதற்கு முன்பு நன்கு வசதியான உட்கார்ந்து கண்களை மூடி இவற்றை யோசிப்பது நல்லது.

இப்பொழுது, நிதி இலக்கை வெற்றியடையச் செய்யும் சூழ்நிலையில் கற்பனை செய்து பாருங்கள். உண்மையான எண்ணங்களைக் கொண்டு அதை தெளிவாகச் செய்யுங்கள். எனவே, உங்களின் நோக்கமானது ஓய்வு பெறுவதாக இருந்தால் அதில் நீங்களும் உங்கள் மனைவியும் தாய்லாந்தில் வளைகுடாவில் கவலை ஏதும் இன்றி இளநீரை பருகி ஓய்வு எடுக்கும் கனவாக நினைத்துப் பாருங்கள். 

இப்போ, அந்த கற்பனைக்கு மேலும் விவரங்களைச் சேர்க்கவும்; நீங்க என்ன துணி அணிந்திருக்கிறீர்கள்? யாருடன் இருக்கிறீர்கள்? அந்த நேரத்தில் நீங்க என்னவாறு உணர்கிறீர்கள்? என்று ஒரு குறும்படம் பார்பதைப் போன்று சிந்தியுங்கள் - உங்க ஆடை, உங்களின் மகிழ்ச்சியான வெளிப்பாடுகள் மற்றும் உங்க மனைவியுடனான உரையாடல்கள், கடற்கரை அலைகளின் ஒலி மற்றும் உங்கள் பேரக்குழந்தைகள் உங்களுடன் விளையாடுவதைப் போன்று கற்பனை செய்யுங்கள்.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கண்களைத் திறக்கவும். அப்பொழுது வேறு சில எண்ணங்கள் உங்களை திசைதிருப்பினால், அதே செயல்முறையை மீண்டும் செய்யுங்கள். இதை உங்க வாழ்க்கை முறையில் அன்றாட வழக்கமாக்குங்கள்.

முக்கிய புள்ளி 

நிதி இலக்குகள அடைவதற்கு காட்சிப்படுத்தல் ஒருசில முரண்பாடுகளை மேம்படுத்தக்கூடும். நம்பிக்கையை உங்களுக்கு கொண்டுவந்து உதவுவதன் மூலமும், நம் இலக்குகளை அடைய நம்மை ஊக்குவிப்பதன் மூலமும் இவ்வாறு நடைபெறுகிறது. இருப்பினும், இது மந்திரம் எதுவும் இல்லை, கடின உழைப்பை எப்போதும் மாற்ற இயலாது. அதற்குமாறாக, ஒரு செயல்திறன் ஊக்குவிக்கும் செயலாக நினைத்துப் பாருங்கள்.

Achieve all your financial goals with Scripbox. Start Now