அவசர நிதி என்ன என்பது நிறையப் பேருக்குத் தெரியும். ஏதாவது எதிர்பாராத அவசர காரணங்களால் 4 அல்ல 6 மாதங்களுக்குள் வருமான இழப்பு ஏற்பட்டு பெரிய செலவுகள் வந்தா, வாழ உதவுற பணத்தை அவசர நிதி என்று சொல்வார்கள்.

அவசர நிதி தொழில் வாழ்க்கையை தொடங்குபவர், இருபதுல அல்லது முப்பதுல இருப்பவர்களுக்கு என்று பலர் நம்புறாங்க. 40 வயதில் பெரும்பாலோருக்கு நிலையான வருமானம் இருக்கும் மற்றும் செலவுகளை நிர்வகிப்பதில் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்.

40 வயசுக்கு மேற்பட்ட இந்தியர்கள், குறிப்பாக பெரிய நகரத்தில் இருப்பவர்கள் முதலீடு செய்யறாங்க. இருந்தாலும் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும்போது அவர்கள் அவசர நிதியை மறந்துவிடுகிறார்கள். உண்மை என்னன்னா அவசர நிதியை பத்தி பேசினாலே சில பேர் குழப்பம் அடைகிறார்!

நீங்க தயாராக இருக்கலாம், ஆனால் நீங்க போதுமான அளவு தயாரா?

அவசர நிலைக்கு தயாராக இருப்பதற்கு முதலீடு மட்டும் இருந்தா போதாது. நம்மில் பலர் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகளை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை, குறிப்பா அப்படிப்பட்ட நிகழ்வு அவர் வாழ்க்கையில் நிகழவில்லை என்றால்.  அவர்களில் பெரும்பாலோர் தன் நிலையை அப்படியே சமாளிக்க அல்லது இன்னும் சிறப்பாக்க திட்டமிடுகிறார்கள். 

நேர்மறையாக இருப்பது நல்லதுன்னாலும், நேர்மறையாகவும் தயாராகவும் இருப்பது இன்னும் நல்லது. புத்திசாலிகள் எப்போதும் நிச்சயமற்ற தன்மைக்கு தயாராக இருப்பாங்க.

நாற்பது வயதில நீங்க குடும்ப குட்டிகளோடு குடும்பஸ்தராக இருக்கலாம். பெரும்பாலோர் வீட்டுக் கடனை செலுத்தி கொண்டு இருக்கலாம். இந்த வயசுல உங்க செலவு 20 அல்ல 30 வயதை விட அதிகமாக இருக்கக்கூடும்.

உங்க வருமானம் உயர்ந்ததால் அதிகரித்து வரும் செலவுகளை நீங்க கவனிக்கவில்லை(சாத்தியம் இல்லை இருந்தாலும்) என்று அர்த்தம். ஆரம்ப ஆண்டுகளை ஒப்பிடும்போது 40 வயசுல நீங்க ஒரு தலைமை அல்லது நடுத்தர நிர்வாக பாத்திரத்தில் இருக்கக்கூடும். சில நேரங்களில் உயர்ந்த சம்பளம் தற்காலிகமாக இருந்தாலும் கீழ்த்தரமான, வருமானம் இல்லாத ஒரு சூழ்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லக் கூடும்.

உங்கள் அதிக செலவுகள் எதைக் குறிக்கின்றன?

யாரும் தம் வாழ்க்கையை, நிதி ரீதியாகவோ அல்ல வேறுவிதமாகவோ அழிக்க விரும்ப மாட்டாங்க. 40 அல்லது 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு, செலவுகள் உச்சத்தில இருக்கும்போது, அவர்களின் 20 அல்லது 30 களில் இருந்த அவசர நிதியை விட அதிகமாக தேவைப்படும். 

உங்க 20 அல்ல 30 களில் உங்க வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு இருந்தது. அந்த கட்டத்தில வேலை இழப்புன்னா பொதுவாக 3-4 மாதங்களில் இன்னொன்றைக் கண்டுபிடிப்பது. வய சாகும்போது இது கடினமாகி கொண்டே போகும். வேலை இழப்பு ஏற்பட்டா, உங்க நிலைக்கு ஏத்த மாதிரி, இன்னொன்றைக் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகலாம். உங்க பொறுப்புகள் வளரும் போது அதை நீங்க தீவிரமா எடுத்துக்கொள்கிறீர்கள்.

வளரும் பொறுப்புகள் மற்றும் செலவுகள் (ஒவ்வொரு மாதமும் நீங்க செய்யக்கூடிய முதலீடுகள் உட்பட), என்றால் அதிகமான பொறுப்புகளை கொடுக்கும்.

நீங்க என்ன செய்ய வேண்டும்?

உங்க முதலீடுகளில சிலவற்றையாவது ஒரு லிக்விட் ஃபண்ட்ல அல்லது வங்கிக் கணக்கில போடுங்க. இது உங்க ஆறு மாச செலவினங்களுக்கு சமமாக இருக்க வேண்டும் அல்லது அல்லது உங்க நிலைமைக்கு ஏத்த மாதிரி இருக்கணும். எல்லாத்துக்கும் மேலாக உங்களுக்கு மற்றும் உங்க குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்கிக்கோங்க.

உங்க செலவுகளுக்கு ஏற்ப அவசர நிதியை நீங்க வளர்த்துக் கொள்ளுங்க, அதாவது நீங்க எப்போதும் குறைந்தது ஆறு மாதங்களுக்கான (இன்னும் அதிகம், உங்க செலவுகளை பற்றி உங்களுக்கு தெளிவு இல்லை என்றால்) செலவுகளை தயாராக வைத்திருங்கள் (லிக்விட் ஃபண்ட் அல்லது பேங்க் அக்கௌன்ட்). சிறந்த தயாரிப்புடன், அதிக அமைதி கிடைக்கும்.