Skip to main content
Scripbox Logo

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளை நீண்ட கால இலக்குகளுடன் இணைப்பது எப்படி?

உங்கள் நிதி இலக்குகளையும், அவற்றிற்குத் தேவையான சொத்துத் தொகுப்புகளையும் நீங்கள் அறிந்தவுடன், அடுத்த கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது அந்த இலக்குகளை அடைவதற்கான சரியான கருவியைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்த அணுகுமுறை நீங்கள் எதிர்பார்க்கும் வருவாய்களை பகுத்தறிவோடு அமைக்க உதவும், முக்கியமாக உங்களை எந்தவொரு ஏமாற்றத்திற்கும் வழி வகுக்காது.

உங்கள் நிதி இலக்குகளையும், அவற்றிற்குத் தேவையான சொத்துத் தொகுப்புகளையும் நீங்கள் அறிந்தவுடன், அடுத்த கட்டமாக நீங்கள் செய்ய வேண்டியது அந்த இலக்குகளை அடைவதற்கான சரியான கருவியைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்த அணுகுமுறை நீங்கள் எதிர்பார்க்கும் வருவாய்களை பகுத்தறிவோடு அமைக்க உதவும், முக்கியமாக உங்களை எந்தவொரு ஏமாற்றத்திற்கும் வழி வகுக்காது.

இந்தக் கட்டுரையில் நாம் முதல் நான்கு வகை குறிக்கோள்கள் அல்லது நீண்ட கால நிதி இலக்குகளை கருத்தில் கொள்வோம்.

5-7 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் இலக்குகள்

நாம் முன்பே கூறியது போல் 5-7 ஆண்டு காலம் வரை எடுக்கக்கூடிய எந்தவொரு நிதி இலக்குகளையும் (ஏனெனில் பொதுவாக அது பெரிய தொகையை உள்ளடக்கியதாகும்) அடைய சொத்துத் தொகுப்பாக ஈக்விட்டி சிறப்பாக உதவும்.

பணவீக்கத்தின் அழிவுகளைக் கருத்தில் கொள்ளும் போது, குறுகிய கால ஏற்ற இறக்கம் மற்றும் சந்தை அபாய வீழ்ச்சிகளை மனதில் வைத்தாலும், ஈக்விட்டி மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை வேறு எந்த சொத்து வகுப்போடும் ஒப்பிட முடியாது.

இந்த இலக்குகளுக்காக பரஸ்பர நிதியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஈக்விட்டியில் முதலீடு செய்வதை பல வழிகளில் செய்யலாம், ஆனால் அதில் மிகவும் பிரபலமானவை ப்ரோக்கர்களின் வாயிலாக நிறுவனங்களின் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வது அல்லது ஈக்விட்டி பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது ஆகும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பது சற்றே கடினமான காரியம், அவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பதே முழுநேர வேலையாகும். பெரும்பாலான முதலீட்டாளர்கள் கவனத்தோடு பங்கைத் தேர்வு செய்தாலும், அவர்களின் முயற்சிக்குப் போதுமான வெற்றி கிட்டுவதில்லை. ஏனெனில் இந்த செயல்களில் பல மாறிகள் இருப்பதால் அவற்றைச் சரியாக கணித்து செயல்பட தொழில்துறை நிபுணத்துவமோ அல்லது குறைந்தபட்சம் அனுபவத்துடன் கூடிய அதிர்ஷ்டமும் தேவை.

பரஸ்பர நிதிகள் தொழில்முறை நிதி மேலாளர்களால் இயக்கப்படுகின்றன; அவர்களின் திறனை பயன்படுத்தி சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நிர்வகிப்பதே அத்தகைய நிதி மேலாளர்களின் பணியாகும். அவர்களின் தகுதிகள் முதன்மையாகக் கருதப்படும்; ஏனெனில் இந்த வேலைகளில் போதுமான அறிவோ, விழிப்புணர்வோ இல்லாதவர்களைக் காட்டிலும் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்.

பரஸ்பர நிதிகள் செபியால் மிகவும் கட்டுப்படுத்தப்படுவதால், இதன் ஈக்விட்டி  பங்குகளில் முதலீடு செய்வது நம்பகத்தன்மைக்கு வழிவகுக்கின்றது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் அவர்களின் பணியை பொருட்டு வாழ்க்கைக்கானப் பங்குகளை எடுப்பதில் ஈடுபடாமல் இருந்தாலும், பரஸ்பர நிதி வழியில் செல்வது அவர்களுக்கு மிகவும் வசதியானதோடு, ஆற்றலுடையதும், பயனுள்ளதுமாகும். 

“பெரும்பாலான நீண்ட கால இலக்குகளுக்கு, அதிகப்படியான தளங்களை உள்ளடக்கிய லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். லார்ஜ் கேப் நிதிகள் பெரு நிறுவனங்களின் குறியீட்டில் முதலீடு செய்வதோடு, பன்முகப்படுத்தப்பட்ட நிதிகள் பலதரப்பட்ட துறைகளிலும், சந்தை மூலதனங்களிலும் முதலீடு செய்கின்றன. இத்தகைய பரஸ்பர நிதிகளில் ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருப்பதால், இதன் வருவாய்களை ஓரளவு அதிகமாகவே கணிக்க முடியும்.”

நீண்ட கால இலக்குகளை கருத்தில் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு எந்த வகையான பரஸ்பர நிதிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

ஒரு சொத்து வகுப்பாக ஈக்விட்டி நிலையற்றத்தன்மையோடு இருந்தாலும், குறியீட்டோடு ஒப்பிடும் போது பரஸ்பர நிதிகள் அதன் விதிகளைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிலையற்றத்தன்மையைக் காட்டலாம்.

இது முக்கியமானது, ஏனென்றால் உங்களுடைய நோக்கம் நிதி இலக்குகளை அடைய உதவும் வருமான விகிதத்தை சம்பாதிப்பதே தவிர வெறுமனே அதிகப்படியான வருமான விகிதத்தைத் தேர்வு செய்வது அல்ல. நினைவிருக்கட்டும் முதலீட்டிற்குக் கிடைக்கக்கூடிய வருமானமும், அதன் அபாயங்களும் ஒன்றோடொன்று பிணைந்தவை. சாத்தியமான வருவாய்க்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தால், அதற்கேற்றாற்போல் ஏற்ற இறக்கங்கள் மற்றும் இழப்புகளுக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

பெரும்பாலான நீண்ட கால இலக்குகளுக்கு, அதிகப்படியான தளங்களை உள்ளடக்கிய லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். லார்ஜ் கேப் நிதிகள் பெரு நிறுவனங்களின் குறியீட்டில் முதலீடு செய்வதோடு, பன்முகப்படுத்தப்பட்ட நிதிகள் பலதரப்பட்ட துறைகளிலும், சந்தை மூலதனங்களிலும் முதலீடு செய்கின்றன. இத்தகைய பரஸ்பர நிதிகளில் ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருப்பதால், இதன் வருவாய்களை ஓரளவு அதிகமாகவே கணிக்க முடியும்.

மிகவும் இறுக்கமான காலக்கெடு அல்லது பெரிய இலக்குத் தொகைக் கொண்டவர்களுக்கு, மிட்-கேப் நிதிகள் மற்றும் சர்வதேச நிதிகளில் (வெளிநாட்டுப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்தல்) முதலீடு செய்வது, அவற்றைப் பற்றிய புரிதலைப் பெற உதவும். ஆனால் இவ்வாறு முதலீடு செய்வதற்கு முன், இதை ஒரு நிதி ஆலோசகரைக் கொண்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சலுகைகளின் வசதி காரணமாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் விஷயத்தில் முறையான முதலீட்டுத் திட்டத்தின் (எஸ்ஐபி) பாதையில் செல்வது புத்திசாலித்தனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சந்தையின் ஏற்ற இறக்க அபாயங்களை வெல்வதற்கும், தொடர்ந்து முதலீடு செய்வதற்கும் சிறந்த வழியாகும்.

உதவிக்குறிப்பு

உங்களுக்கு நிறைய நீண்ட கால நிதி இலக்குகள் இருந்தால், முதலில் உங்கள் அருகில் இருக்கும் முறையான முதலீட்டுத் திட்டத்தில் கவனம் (எஸ்ஐபி) செலுத்தவும். இதற்கான அர்த்தம் என்னவென்றால் பின்னர் வரக்கூடிய இலக்குகளை விட இதற்கு அதிக ஒதுக்கீடும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும் என்பதாகும். ஆனால் பின்னர் வரக்கூடிய இலக்குகளில் ஓய்வூதியம் போன்ற முக்கியமான நிதி இலக்குகளுக்கான முதலீட்டை நிறுத்த வேண்டாம். இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் நாம் குறுகிய கால நிதி இலக்குகளையும் அவற்றுடன் பரஸ்பர நிதியை எவ்வாறு இணைப்பது என்பது பற்றியும் பார்ப்போம்.

Achieve all your financial goals with Scripbox. Start Now