
ஸ்கூல்ல கணிதம் இயற்பியல் வரலாறு மற்றும் மூன்று வெவ்வேறு மொழிகள கத்துகிட்டேன். அந்தப் பாடங்கள் உலகத்தை புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பை கொடுத்தாலும் நடைமுறையில் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை.
வெளிப்படையா சொல்லனும்னா இந்த எளிய பைனான்ஸ் பாடங்களை ஸ்கூல்ல கத்து கிட்டு இருந்தா நிச்சயமா என் வாழ்க்கையில ஒரு குறிப்பிடத்தக்க நன்மைய தந்திருக்கும் மேலும் பல தவறுகளை தவிர்க்க எனக்கு உதவி இருக்கும் (மற்றும் நான் இன்று இருப்பதை விட இன்னும் நல்லா இருந்திருப்பேன்.)
# 1. பணவீக்கம் நீண்ட காலத்திற்கு இருக்கும்
பணவீக்கம்ன்னா உங்க வாழ்க்கை மாறாமல் இருந்தாலும் தற்போதைய செலவுகள் அதிகரித்து கொண்டே இருக்கும். இந்தியாவில பணவீக்கம் வருஷத்துக்கு 8% க்கும் அதிகமாக இருந்த காலங்கள் இருந்தன. தற்போது, பணவீக்கம் வருஷத்துக்கு சுமார் 4% -5% ஆக இருக்கு. இந்த விகிதத்தில, உங்க வருடாந்திர செலவு அடுத்த பத்து வருஷத்துல 50% க்கும் அதிகமாக உயரும்.
#2. முதலீடு மற்றும் சேமிப்பு
உங்க வருமானத்தில ஒரு பகுதியை சேமிப்பாக ஒதுக்கி வைக்கலாம். இந்த பணத்த நீங்க சில பாரம்பரிய சொத்துக்களில (காப்பீடாக சேவிங்க்ஸ் அக்கவுன்ட் அல்ல இன்சூரன்ஸ்) சேமித்தால், நீங்க பணவீக்கத்த பெரிய அளவில வெல்ல மாட்டீங்க. உங்களுக்கு சந்தேகம் இருந்தா, உங்க வங்கியாளரிடம் அவங்க எங்க முதலீடு செய்யறாங்க என்று கேளுங்கள்.
#3. முதலீடு என்பது ஒரு பொறுமை விளையாட்டு
சில “ஓட்டை வாய்கள்” அவங்க செஞ்ச பெரிய ஒப்பந்தம் மற்றும் வருமானத்தைப் பற்றி பெருசா பேசுவாங்க. அதே “ஓட்டை வாய்கள்” பணத்தை இழக்கும் போது முகத்த காட்ட மாட்டாங்க. அப்படிப்பட்டவங்கள நம்பாதீங்க. நான் மறுபடியும் சொல்றேன், முதலீடு செய்வது பொறுமை விளையாட்டு, உங்க பணத்தை உருவாக்க நேரம் வேணும். விரைவான மற்றும் எளிதான வெற்றிகள் குறுகிய காலத்துக்கு செயல்படலாம், ஆனா நீண்ட காலத்துக்கு நீடிக்காது.
#4 நாட்டு வளர்ச்சியில பங்கு ஏத்துக்கணும்
நம் நாட்டு வளர்ச்சில பலர் பங்கேற்கும் ஒரு வழி என்னன்னா சில உயர்தர நிறுவனங்களை வாங்கி அதன் வளர்ச்சியில பயனடைவது. பெரிய கம்பெனிகள் எப்போதும் ஜி டி பி யுடன் ஒத்துப்போகின்றன, இதனால் அவைகள் பணவீக்கத்தை ஒரு பெரிய அளவில் வெல்கின்றன.
# 5. மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு இருக்கும்
இந்தியாவில மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் தம்மிடம் இருக்கும் ஒரு பகுதி பணத்தை மட்டுமே சேமிப்பில போடறாங்க. ஆனா வளர்ந்த நாடுகளின் மக்கள் அவங்க சேமிப்பில கணிசமான பகுதியை மியூச்சுவல் ஃபண்டில முதலீடு செய்யறாங்க. நம் நாடு வளரும் போது மேலும் மேலும் மக்களின் பணம் மியூச்சுவல் ஃபண்டுக ளுடன் இணைக்கப்படும், ஏன்னா உயர்மட்ட நிறுவனங்களின் வளர்ச்சியில பங்கேற்க இது சுலபமான வழி.
#6. உங்க வரிகளை நல்லா திட்டமிடுங்க
நீங்க சம்பாதிக்கும் வருமானத்துக்கு முழு வரி விதிக்கப்படலாம். ஆனா உங்க பணத்துக்கு மூலதன ஆதாயங்கள் இருந்தா மட்டுமே அதுக்கு வரி விதிக்கப்படும். மேலும், நீண்ட கால மூலதன ஆதாயங்கள் மேலே வரி உங்க வருமானத்தை விட குறைந்ததாகும். உங்க முதலீடுகளை சரியா திட்டமிட்டா ஒட்டுமொத்தமாக வரிகளை குறைக்கலாம் மற்றும் அதிக வரிகளை தவிர்க்கலாம் இதனால் ஒட்டு மொத்தமா போர்ட்ஃபோலியோ வளரலாம்.
கணிதம் அல்லது புவியியல் போல ஸ்கூலில் இந்த ஆறு பாடங்களையும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதனால நம் குழந்தைங்க எதிர்காலம் சிறப்பா இருக்க முடியும்.