Skip to main content
Scripbox Logo

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு கோடிக்கணக்கில் பணத்தை சேமியுங்கள்

அவரிடம் நான் உள்ளுணர்வு கொண்டு ‘நீங்க புகைப்பதை விட்டுவிடுங்க, மற்றும் குடிப்பழக்கத்தை குறைத்தாலே போதும், நீங்க கோடிக்கணக்கில பணத்தை சேமிக்க முடியும் தெரியுமா’ என்று கூறினேன். நான் கூறியது அவருடைய கவனத்தை ஈர்த்தது. அது எப்படி சாத்தியமாகும்? என்று கேட்டார்.

என்னுடைய நண்பர் அசுதோஷ் என்பவர் தீவிர கேபிசி (கோன் பனேகா குரோர்பதி) ரசிகர். அந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு பருவத்திலும் அவர் போட்டியில் பங்கேற்க வெறித்தனமாக செயல்படுவார், இப்போது அவர் அந்த நிகழ்ச்சியின் 11 வது சீசனுக்கு தீவிரமாகத் தயாராகி வருகிறார். ஒருமுறை எங்க உரையாடலின் போது, நான் அவரிடம் ‘நீங்க புகைப்பது மற்றும் குடிப்பழக்கத்தை குறைத்தாலே போதும், கோடிக்கணக்கில் பணத்த சேமிக்க முடியும் தெரியுமா’ என்று கூறினேன். நான் கூறியது அவருடைய கவனத்தை ஈர்த்தது. அது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டார்?

அதற்கு அவரிடம், ஒரு நாளில் எத்தனை சிகரெட்டுகளை புகைக்கிறீர்கள்? என்று கேட்டேன், அவர் 10 சிகரெட்டுகள் என்றார். மேலும் பீர் எத்தனை பாட்டில்கள் குடிபிர்கள்? என்று கேட்டேன், ஒரு வாரத்திற்கு நான்கு பீர் பாட்டில்கள் குடிப்பேன் என்றார். நான் வேகமாக சில எண்களை முன்வைத்தேன். ஒரு நாளைக்கு பத்து சிகரெட்டுகள் என்றால் சுமார் 150 ரூபாயும் ஒரு மாதத்திற்கு ரூ .4,500 செலவாகும். மேலும் 16 பீர் பாட்டில்களை வாங்கி குடிப்பதற்கு மேலும் ரூ .2,000 செலவாகிறது. நான் ஒரு பழமையான மதிப்பீட்டை எடுத்து முன்வைத்தேன் - மதுக்கடையில் பீர் வாங்குவது என்பது அந்த மதுக்கடையின் விலையை விட அதிகம் செலவாகும். ஒவ்வொரு மாதமும் சுமார் 6,500 ரூபாயை புகைபிடித்தல் மற்றும் குடிப்பதற்காக அவர் செலவழிக்கிறார் என்று நான் மதிப்பிட்டேன். ஒவ்வொரு ஆண்டும் செலவில் 10% உயர்த்தும்படி அவரிடம் கூறினேன்.

செலவின் மதிப்பு

அவர் எதை சேமிக்கவேண்டும் என்பதை நான் அவரின் செலவோடு தொடர்புபடுத்தி அவருக்கு தெரிவிக்க ஒரு நல்ல யோசனையை கூறினேன். ஒரு வாரத்தில், அவர் ரூ .1,530 சேமிக்கிறார் என்றால் - அவரின் புதிய ஆடைகளை வாங்குவதற்கும், அல்லது இரண்டு பேருக்கு உணவளிப்பதற்கும் அது போதுமானது. அல்லது மாதத்திற்கு ரூ .6,500 சேமித்தால், நகரின் புறநகரில் வார இறுதி குடும்ப பயணத்திற்கு செலவு செய்ய போதுமானது. ஆண்டுக்கு ரூ .78,000 செய்யலாம் ஒரு மேக்புக் ஆப்பிள் மாக் புக் வாங்கலாம் அல்லது வீட்டு சீரமைப்பு பணியை செய்யலாம். 

ஐந்து ஆண்டுகளில்,அவர் ரூ .4.8 லட்சத்தை மிச்சப்படுத்தலாம் - ஒரு சிறிய ஹேட்ச்பேக் காரை வாங்கவும் ஒரு சர்வதேச குடும்ப விடுமுறைக்கு செல்லவும் அது போதுமானதாகும். அப்படி பார்த்தால் இன்னும் 10 ஆண்டுகளில் எவ்வாறாகும்? ரூ .124 லட்சம் சேமிக்கலாம், இது அவருக்கு ஒரு பெரிய பிரீமியம் காரை வாங்கவும் அல்லது அவரது புதிய வீட்டின் கட்டணத்தை செலுத்த உதவும்.


நேர அடிவானம்

இப்போது, அவர் கோடி ரூபாய்களை பெறக்கூடிய வழியை கண்டறிய ஆர்வமாக இருந்தார். பிறகு நான் மேற்கண்ட மதிப்பீடுகளை முதலீடுகள் மூலம் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை கருத்தில் கொள்ளகூடாது என்று விளக்கினேன். அவர் இந்த சேமிப்புகளை பங்குகளில் முதலீடு செய்வதால், 19 ஆண்டுகளில் அவர் கோடீஸ்வரறாக முடியும்.

அது எப்படி?

மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக பங்குகளில் முதலீடு செய்து நீண்ட காலத்திற்கும் ஆண்டிற்கு சுமார் 12% சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், 19 ஆண்டுகளில் ரூ .1 கோடி என்ற அளவை எட்டமுடியும் .

நிச்சயமாக, உங்களுக்கு எதிரான முரண்பாடுகளை கொண்ட KPC விளையாட்டைப் போல் இல்லாமல், நீங்க அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தா வெற்றி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிச்சயம் கிடைக்கும். அவருக்கு உடனே ஓர் யோசனை கிடைத்தது.

ஐந்து ஆண்டுகளில்,அவர் ரூ .4.8 லட்சத்தை மிச்சப்படுத்தலாம் - ஒரு சிறிய ஹேட்ச்பேக் காரை வாங்கவும் ஒரு சர்வதேச குடும்ப விடுமுறைக்கு செல்லவும் அது போதுமானதாகும். அப்படி பார்த்தால் இன்னும் 10 ஆண்டுகளில் எவ்வாறாகும்? ரூ .124 லட்சம் சேமிக்கலாம், இது அவருக்கு ஒரு பெரிய பிரீமியம் காரை வாங்கவும் அல்லது அவரது புதிய வீட்டின் கட்டணத்தை செலுத்த உதவும்.

வெல்த் கிரியேஷன் 

ஒரு பழைய பழமொழி உள்ளது ‘ஆரோக்கியமே சிறந்த செல்வம்’ என்று அதன் பொருள். புகைபிடிப்பதை விட்டுவிடுவதன் மூலம், உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களின் அன்புக்குரியவர்களுக்கும் உதவ முடியும்.

மேலும், செயல்பாட்டில் உங்க ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்கிறீர்கள். இங்குதான் ஈக்விட்டிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நோ டொபாக்கோ தினத்திற்கு முன்னதாக, என்னால் என் நண்பரை வெற்றிகரமாக சமாதானப்படுத்த முடிந்தது. ஒருவேளை என்னால் என்றென்றும் செய்ய முடிந்திருக்கும். அப்படியென்றால் நீங்க?


Our Most Popular Categories

Achieve all your financial goals with Scripbox. Start Now