Skip to main content
Scripbox Logo

இப்போது தான் பெற்றோர் ஆனீர்களா? உங்களுக்காகவே ஒரு எளிய நிதி சரிபார்ப்புப் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சில சிறிய முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், இந்த புதிய பொறுப்பின் நிதி அம்சங்களை நீங்கள் கவனமாக கையாளுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பட்டியல் அனைத்து புதிய பெற்றோர்களுக்கும் பின்பற்ற உதவியாக இருக்கும்.

சில சிறிய முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், இந்த புதிய பொறுப்பின் நிதி அம்சங்களை நீங்கள் கவனமாக கையாளுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பட்டியல் அனைத்து புதிய பெற்றோர்களுக்கும் பின்பற்ற உதவியாக இருக்கும்.

முதலில் நீங்கள் பெற்றோரானதற்கு வாழ்த்துக்கள். இது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு உணர்வு என்று எங்களுக்குத் தெரியும். உங்கள் வாழ்க்கையின் புதிதான மற்றும் மகிழ்ச்சியான ஒரு பகுதியைத் தொடங்கி இருக்கிறீர்கள். இந்தப் பயணம் உங்களுக்கு நிச்சயம் உற்சாகமானதாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

இதுவரை உங்கள் வாழ்க்கையில் வந்த பல தருணங்களில் இது மிகப்பெரும் பொறுப்பு என்பதால், இதன் முக்கியத்துவத்தை நீங்கள் நிச்சயம் உணரக்கூடும். சில சிறிய முக்கியமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், இந்த புதிய பொறுப்பின் நிதி அம்சங்களை நீங்கள் கவனமாக கையாளுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பட்டியல் அனைத்து புதிய பெற்றோர்களுக்கும் பின்பற்ற உதவியாக இருக்கும்.

#1. உங்கள் சேமிப்பை அதிகரிக்கவும் 

இது மிகவும் எளிமையானதாகத் தோன்றினாலும், இதுவே முதலில் முக்கியமான  படியாகும். உங்கள் செலவுகள் கணிசமாக அதிகரிப்பதை நீங்கள் விரைவிலேயே பார்க்கப் போகிறீர்கள். அவற்றை பூர்த்தி செய்ய இப்போதே உங்கள் சேமிப்பை அதிகரிப்பது புத்திசாலித்தனமான ஒன்றாகும். அவ்வப்போது உங்கள் அவசர நிதியை பார்த்து அதில் கொஞ்சம் பணம் போட்டு வைப்பதும் நல்லது. இந்த நேரத்தில் வேலையின்மையோ அல்லது மருத்துவ அவசர நிலையோ வலி மிகுந்த ஒன்றாக இருக்கும். அதனால் இத்தகையத் தேவைகளைக் கையாள புத்திசாலித்தனமாகத் தயாராக இருங்கள்.

“மருத்துவ மற்றும் சுகாதாரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருப்பதால், உங்கள் குழந்தையையும் உங்கள் குடும்ப சுகாதாரத் திட்டத்தில் சேர்ப்பது விவேகமானதாகும். அது போக உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை தவறாமல் இந்த செலவுகளுக்கு ஒதுக்கவும். உங்கள் குழந்தைக்காக நீங்கள் மருத்துவரை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். உங்கள் மருத்துவக் காப்பீடு அதை பூர்த்தி செய்யாவிட்டால், உங்கள் செலவுகள் விரைவாக விண்ணைத் தொடும் அளவிற்கு உயரும்.”

#2. மருத்துவம் மற்றும் சுகாதாரம் போன்ற அதிகச் செலவுகளுக்குத் திட்டமிடுங்கள்

மருத்துவ மற்றும் சுகாதாரச் செலவுகள் இப்போது அதிகமாகி இருப்பதால், உங்கள் குழந்தையையும் உங்கள் குடும்ப சுகாதாரத் திட்டத்தில் சேர்ப்பது விவேகமானதாகும். அது போக உங்கள் சேமிப்பின் ஒரு பகுதியை தவறாமல் இந்த செலவுகளுக்கு ஒதுக்கவும். உங்கள் குழந்தைக்காக நீங்கள் மருத்துவரை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். உங்கள் மருத்துவக் காப்பீடு அதை பூர்த்தி செய்யாவிட்டால், உங்கள் செலவுகள் விரைவாக விண்ணைத் தொடும் அளவிற்கு உயரும்.

#3. நீங்கள் ஏற்கனவே ஆயுள் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்யவில்லை என்றால் இப்போதே செய்திடுங்கள்

வாழ்க்கை நிச்சயமற்றது. ஆனால் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையும் உங்கள் குடும்பத்தை பாதிக்காது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். உங்கள் வருமானத்திற்கேற்ப ஒரு தொகையை வைத்திருப்பது நல்லதாகும். இதனுடன் உண்மையில் ஒரு கோடி ரூபாய் இருந்தால், அதற்கேற்ப உங்கள் குடும்பத்தின் தேவைகள் எந்த அளவிற்கு இருக்கும் என்று ஒப்பிட வேண்டும். இது ஒப்பீட்டளவில் மலிவானது மட்டுமல்லாமல் உங்களுக்கு உண்மையான மன அமைதியையும் தரக்கூடியதாகும்.

#4. மூன்று ஆண்டுகளில் தொடங்கும் பள்ளி கல்வி செலவினங்களுக்காக திரவ நிதியில் ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தைத் (SIP) தொடங்கவும்

உங்கள் சேமிப்பைப் பொறுத்து பள்ளி கல்விக்கான கட்டணத்தைத் தொடங்க முயற்சிக்கவும். இது உங்கள் வருமானத்தில் திடீரென வரக்கூடிய மற்ற பெரும் செலவுகளைத் தவிர்க்க உதவும். சமீப காலங்களில் 12 சதவிகிதமாக இருந்த கல்விக்கான செலவுகள், சாதாரண பண வீக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதன்மூலம் உங்கள் குழந்தைகளின் கல்வி தொடர்பான எந்தவொரு நிதி இலக்கையும் திட்டமிடும் போது இதை மனதில் கொள்ள வேண்டும்.

#5. கல்லூரி நிதியைத் தொடங்க நல்ல நேரம்

உங்கள் குழந்தைகளின் கல்லூரிக் கட்டணத்திற்காக சேமிக்க ஒரு நல்ல பரஸ்பர நிதி பங்குகளின் போர்ட்ஃபோலியோக்களில் முதலீடு செய்யுங்கள். இதை முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) தொடங்குவதற்கு குறைந்த அளவு நிதியும், தொடர்ந்து செய்யக்கூடிய அர்ப்பணிப்பு இருந்தால் போதுமானது. இதனால் உங்கள் வருமானத்தில் தடை வரும் வாய்ப்பு குறைகிறது. பல நிதி பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு, இதை நீங்கள் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் இது உண்மையிலேயே ஒரு வரமாக இருக்கக்கூடும்.

அது போக உங்கள் குழந்தை வெளிநாட்டில் கல்வி பயில விரும்பினால், அதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இது முன்னோக்கி திட்டமிடுதலுக்கும், சர்வதேச நிதியில் முதலீடு செய்வது உட்பட மிகவும் மாறுபட்ட போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வது என்பதாகும். இதை செய்வதற்கு நீண்ட 17 வருடங்கள் வரை ஆகும் என்பதால், முறையான முதலீட்டு திட்டத்தில் குறைந்த அளவு நிதியை முதலீடு செய்வதன் மூலமே இதை அடைய முடியும்.

உங்கள் வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை நீங்கள் தொடங்கும் போது, இந்த 5 குறிப்புகள் உங்களை நிம்மதியாக உணர வைக்க உதவும் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்..!!!

Achieve all your financial goals with Scripbox. Start Now