
சமீபத்தில், எனது நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அவள் உற்சாகம் பொங்க, மிகக் குறுகிய காலத்தில் தனது ஸ்கிரிப்பாக்ஸ் கணக்கில் 10 இலட்ச ரூபாய்க்கு ஒரு இலட்ச ரூபாய் குறைவாக பணம் உள்ளதாக சொன்னாள்.
“மில்லியனர்” என்ற வார்த்தையை சுற்றி எப்போதுமே ஒரு மோகமும், ஈர்ப்பும் உண்டு. முன்பு இந்தியாவில் அதிகமான செல்வம் சேர்த்து வைத்திருப்போரை “இலட்சாதிபதி” என்று அழைப்பர்; ஆனால் இன்று எல்லாருமே எவ்வளவு வேகமாகவும் விரைவாகவும் முடியுமோ, அவ்வளவு விரைவாக ஒரு பத்து இலட்ச (ஒரு மில்லியன்) ரூபாயாவது சேர்க்க வேண்டும் என்று முனைகின்றனர். இதில் வரக் கூடிய கேள்வி என்னவென்றால், பணவீக்கம் எப்படி உங்கள் வருவாயின் மதிப்பை இழக்கச் செய்கிறது என்பது தான்.”
முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்து வருமானம் ஈட்ட ஆரம்பிக்கும் இளம் தலைமுறையினர் அவ்வளவு பணம் வைத்திருப்பது சாத்தியமில்லை. இந்த கட்டுரை நீங்கள் 30 வயதை அடைவதற்குள் கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பதை காண்பிக்கும். உங்களுக்குத் தேவையானது எல்லாம் எளிமையாக பின்பற்றக் கூடிய எளிய திட்டங்கள் மட்டுமே.
உதாரணமாக, 22 வயதான நீங்கள் மாதம் ரூ.25,000 சம்பாதித்து அதில் ஆரம்ப கால சேமிப்பாக உங்களால் ரூ.5,000 சேமிக்க முடிகின்றது என வைத்துக் கொள்வோம்.
உங்களுக்கானத் திட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு: ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் சேமித்து அதை கடன் நிதிகள் (டெப்ட் ஃபண்ட்) அல்லது தொடர்ச்சியான வைப்புத் தொகையில் (ஆர்.டி) முதலீடு செய்யுங்கள். நாங்கள் பரிந்துரைப்பது கடன் நிதியை, ஏனெனில் அதற்கு தான் வரி விலக்கு உண்டு (டீ.டி.எஸ்).
இரண்டாம் ஆண்டு: ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய சேமிப்பை 10 சதவீதம் அதிகரித்து, மாதத்திற்கு ரூ.5,500 ஆக சேமியுங்கள். ( உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்!!) அதை கடன் நிதிகளில் முதலீடு செய்யுங்கள்.
மூன்றாம் ஆண்டிலிருந்து எட்டாம் ஆண்டு வரை: ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சேமிப்பை 10 சதவீதம் அதிகரிக்கவும்; ஆனால் இம்முறை அதை வரி சேமிப்பு பங்கு நிதிகளில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். எனவே, மூன்றாம் ஆண்டில் 6,050 ரூபாயாகவும், நான்காம் ஆண்டில் 6,655 ரூபாயாகவும் அப்படியே தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்த படியே இருக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்த முதலீட்டின் மூலம் 30 வயதிற்குள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான (10 இலட்சம் ரூபாய்) இருப்பதை நீங்கள் எதிர்பாக்கலாம்..!!
